உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அங்காரா: மேற்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவானது. இந்த நில அதிர்வால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பாலிகேசிர் மாகாணத்தில் உள்ள சிந்திர்கி நகரத்தின் மையத்தில் பூமிக்கு அடியில் 5.99 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவாகியது. இந்த நில அதிர்வால் கட்டடங்கள் குலுங்கின. இஸ்தான்புல், புர்சா, மனிசா, இஷ்மிர் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களிலும் இந்த நிலஅதிர்வானது உணரப்பட்டது. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vnkfsa35&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும், கடந்த முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பலவீனமான கட்டடங்கள், இந்த முறை ஏற்பட்ட நில அதிர்வால் சரிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இதில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இது குறித்து உள்துறை அமைச்சர் அலி யேர்லிகயா கூறுகையில், 'சிந்திர்கியில் பயன்பாடில்லாத 3 கட்டடங்கள் மற்றும் இரண்டடுக்கு கடையும் இடிந்து விழுந்துள்ளன. இவை அனைத்தும் கடந்த முறை ஏற்பட்ட நில நடுக்கத்தால் பலவீனமான கட்டடங்கள் ஆகும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

cpv s
அக் 28, 2025 18:17

indian will send all money to turkey and others things which we collected tax from people india, then indian people will beg here


SENTHIL NATHAN
அக் 28, 2025 14:24

இதற்கு முன் தேறுக்கிஇல் நிலநடுக்கம் ஏற்பட்டது அப்போது இந்தியா உடணே உதவி பொருட்கள் வல்லுநர் குழு அனுப்பி பல உயிர்களை காக்க உதவியது. அதுகளின் வழக்கம் போல உதவுவோரின கையை வெட்டியது க. கர்மா வச்சு செயும்


Abdul Rahim
அக் 28, 2025 12:57

இயற்க்கை பேரிடரில் இருந்து அனைத்து உலக மக்களையும் இறைவன் பாதுகாக்கட்டும்.


Kumar Kumzi
அக் 28, 2025 12:29

நன்றிகெட்ட நாடு


Rathna
அக் 28, 2025 12:02

நன்றி கெட்ட நாடு. நாம் நிலநடுக்கத்தில் உதவி செய்ததை மறந்து, பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு உதவியவர்


SIVAN
அக் 28, 2025 11:53

அகம் புறம் இரண்டும் தூய்மையாக பணிவோடு இருக்க வேண்டும், அது தனி மனிதனாக இருந்தாலும் சரி அரசாங்கமாக இருந்தாலும் சரி. இல்லை என்றால் இயற்கை எப்படி தாண்டவம் ஆடும் என்று கணிக்க முடியாது.


புதிய வீடியோ