உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / துபாய் 67 அடுக்குமாடி கட்டிடத்தில் பெரும் தீ விபத்து: 3,820 குடியிருப்பாளர்களும் பத்திரமாக மீட்பு

துபாய் 67 அடுக்குமாடி கட்டிடத்தில் பெரும் தீ விபத்து: 3,820 குடியிருப்பாளர்களும் பத்திரமாக மீட்பு

துபாய்: துபாயில் உள்ள 67 அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அதில் குடியிருந்த 3,820 பேரும் எவ்வித காயமும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்துபாய் மரினா பின்னாக்கிள் என்றும் அழைக்கப்படும் டைகர் டவரின் 67 மாடி குடியிருப்பில் மேல் தளங்களில் நேற்று இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் பல நிலைகளில் தீப்பிழம்புகள் பரவியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o5sisil5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0துபாய் சிவில் பாதுகாப்பு சிறப்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று, தீயைக் கட்டுக்குள் கொண்டுவர இரவு முழுவதும் உழைத்தது.அந்த பணிகள் முழுமையாக இன்று காலையில் முடிவடைந்தது.இது தொடர்பாக பாதுகாப்பு சிறப்பு குழு அதிகாரிகள் கூறியதாவது:எங்களது குழுவின் நடவடிக்கை குடியிருப்பாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தன, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முழுமையான வெளியேற்றத்தை மேற்கொண்டன. பாதிக்கப்பட்ட 3,820 பேர்களுக்கும் தற்காலிக தங்குமிடம் வழங்கப்பட்டது.ஆறு மணி நேரத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.தீயணைப்பு குழுக்கள் முழு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் சம்பவ இடத்தில் உள்ளன.தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடரும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !