உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மக்களாட்சிக்கு வழிவிடுங்க; வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸூக்கு அழுத்தம்

மக்களாட்சிக்கு வழிவிடுங்க; வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸூக்கு அழுத்தம்

டாக்கா: மக்களால் தேர்வு செய்யப்படும் அரசாங்கத்தை அமைக்க அனுமதிக்குமாறு வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸூக்கு அரசியல் கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. நாடு முழுதும் வெடித்த வன்முறையை அடுத்து, வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறினார். அரசு கவிழ்ந்ததை அடுத்து, பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. அப்போது, அடுத்த ஆறு மாதத்திற்குள் பொது தேர்தல் நடத்தி, புதிய அரசை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.இடைக்கால அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமானை ஆலோசிக்காமல், தேசிய பாதுகாப்பு ஆலோசகரை யூனுஸ் நியமித்தார். இது, இரு தரப்பினருக்கும் இடையே உரசலை ஏற்படுத்தியது. இதையடுத்து, உடனடியாக பொதுத் தேர்தலை அறிவிக்கும்படி, யூனுசுக்கு ராணுவ தளபதி ஜமான் அழுத்தம் கொடுத்து வருகிறார்.இதனால், தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் யூனுஸூக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர் தேர்தலை தள்ளிவைப்பதில் முனைப்பு காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், டாக்காவில் இன்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடன் முகமது யூனுஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது, சிலர், இடைக்கால அரசு தேர்தலை நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், நீண்டகால கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக, ஷேக் ஹசினா ஆட்சியின் போது, வங்கதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த வங்கதேச தேசியவாத கட்சி, இடைக்கால அரசு தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்றும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஆனால், தேர்தலையே நடத்தாமல், இடைக்கால அரசின் ஆட்சியை தொடர யூனுஸ் விரும்புவதாக குற்றம்சாட்டப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ஆரூர் ரங்
மே 26, 2025 18:25

புலி மீது அமர்ந்துவிட்டார். இறங்கினால் கதை அவ்வளவுதான். ஜனநாயகத்துக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் சரிப்பட்டு வராது .


அப்பாவி
மே 26, 2025 06:36

பேசாம நாலு முல்லாக்களை தலைவர்களாப் போட்டு ஆட்சி நடத்தலாம். தாலிபான் ஆட்சி நடத்தலாம். யூனுஸ், ஹசினா ந்னு யார் ஆட்சிக்கு வந்தாலும் மக்களை சுரண்டித் திம்பாங்க.


அப்பாவி
மே 26, 2025 06:34

அரசியல்வாதிகளுக்கு அறிவே இல்லை. பங்களேதேஷ், பாகிஸ்தான் நாடுகளுக்கு ராணுவம் ஒரு கேடு. கத்துக்குட்டி ஜெனரல் எல்லாம் ஜனநாயகம்னா என்னன்னு தெரியாதவனெல்லாம் ராணுவ ஆட்சின்னு சொல்லி நாட்டை சீரழிக்கிறான்.


Kasimani Baskaran
மே 26, 2025 04:08

ஜனநாயகம்தான் உலகில் சிறந்த ஏற்பாடு என்று மார் தட்டும் அமேரிக்கா ஏன் இப்படி ஒரு பொம்மையை பிரதமராகி அடாவடித்தனம் செய்கிறது என்றால் அது இந்தியாவுக்கு கொடச்சல் கொடுக்கவே.


Karthik
மே 26, 2025 00:00

பதவி, அதிகாரம், ஆடம்பரம், சொகுசு வாழ்க்கை என இந்த வயசுலயும் எந்த செலவும் இல்லாம கிடைக்குதுன்னா அதை எப்படி சுயநலவாதிகள் விட்டுக் கொடுப்பானுங்க??


Barakat Ali
மே 25, 2025 23:51

யூனுஸால் பங்களாதேஷில் தலையெழுத்தை மாற்ற முடியாது ....... ஜனநாயகம் என்றால் பல இடங்களில் அலர்ஜி ..... முன்னேற்றத்துக்கு மதம் குறுக்கே நின்றுவிடக்கூடாது .....


மீனவ நண்பன்
மே 25, 2025 23:06

பங்களாதேஷ் துரைமுருகன் ..


புதிய வீடியோ