உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது லிபரல் கட்சி!

கனடாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது லிபரல் கட்சி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா; கனடாவில் பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது.அண்மைக்காலமாக, கனடாவின் அரசியல் தட்பவெப்பங்கள் மாறி கொண்டே இருக்கின்றன. அந்நாட்டின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ சர்ச்சைகள், கடும் விமர்சனங்கள் இடையே தமது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அவரது லிபரல் கட்சியில் இருந்து மார்க் கார்னி புதிய பிரதமரானார். இந்தாண்டு அக்டோபரில் நடக்க வேண்டிய பார்லி. தேர்தலை, கார்னி பார்லிமென்டை கலைத்து உடனடியாக தேர்தலை அறிவித்தார். இதையடுத்து, இந்திய நேரப்படி நேற்று மாலை ஓட்டுப்பதிவு நடந்தது. கிட்டத்தட்ட 3 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை செலுத்தினர். ஓட்டுச் சீட்டு முறையில் தேர்தல் நடந்து முடிந்த உடனயே வாக்குகள் எண்ணும் பணியும் தொடங்கி உள்ளது.இதுவரை அறிவிக்கப்பட்ட 177 இடங்களில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி 87 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 75 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கியூபக் கூட்டணி 14 இடங்களிலும், என்.டி.பி., கட்சி ஒரு இடத்திலும் முன்னிலையில் இருக்கிறது.கனடாவில், கலைக்கப்பட்ட பார்லிமென்டில் 338 இடங்கள் இருந்தன. அவற்றில் ஆளும் கட்சியான லிப்ரல் கட்சி 153 இடங்களை வைத்திருந்தது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியான கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமையில் 120 உறுப்பினர்கள் இருந்தனர். கியூபக் கூட்டணி 33 இடங்களும், என்.டி.பி., கட்சி 24 இடங்களும், பசுமைக் கட்சி இரண்டு இடங்களும் வைத்திருந்தனர். சுயேச்சைகளாக மூன்று எம்பிக்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

கொங்கு தமிழன் பிரசாந்த்
ஏப் 29, 2025 14:57

EVM கிட்டத்திட்ட 25-30 வருட பழைய தொழில்நட்பமானது. பல ஆசிய நாடுகளில் பேப்பர் பலட் என்னும் ஆப்டிகல் ஸ்கேனர் உபயோகப் படுத்தப்படுகிறது.


அப்பாவி
ஏப் 29, 2025 09:46

லிபரல் கட்சிக்காரன் மக்களுக்கு சலுகை, ஓசிகள் குடுத்தே நாட்டை ஏழையாக்குவான். கன்சர்வேடிவ் கட்சிக்காரன் மக்களிடமிருந்து உருவி பணக்காரர்களுக்கு குடுத்து மக்களை போண்டியாக்குவான். எல்லா நாட்டிலும் இது மாறி மாறி நடக்கும்.


thehindu
ஏப் 29, 2025 08:58

மோடியை எதிர்ப்பவர்கள்


ديفيد رافائيل
ஏப் 29, 2025 08:25

இந்தியாவில் மட்டும் தான் EVM இருக்கு போல


Keshavan.J
ஏப் 29, 2025 10:12

திரு டேவிட் ரபேல் அவர்களே கனடா மக்கள் தொகை 3,9742,430 கிட்டத்தட்ட 4 கோடி. இந்த 4 கோடியில் வாக்காளர்களில் ஒரு ரெண்டில் இருந்து 2 1/2 கோடி பேர் ஓட்டளித்தாலும் இதை சுலபமாக எண்ண முடியும். ஆனால் இந்தியாவில் 64 கோடி பேர் 2024 எலெக்ஷனில் வோட்டளித்தார்கள். இதை பேப்பர் பலோட்யில் நடத்தினால் ரிசல்ட் வர எத்தனை நாள் ஆகும் என்று கூறுங்கள். நீங்கள் உங்கள் பெயர் டேவிட் ரபேல் என்ற பெயரை அரபியில் வைத்துக்கொண்டு இந்த கேள்வி கேட்கறீங்க.


Krishnan
ஏப் 29, 2025 07:32

Good


முக்கிய வீடியோ