உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிப்பு

மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்டாக்ஹோம்: உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவத்துக்காக அமெரிக்காவை சேர்ந்த 2 விஞ்ஞானிகள் மற்றும் ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் நோபல் பரிசு, கடந்த 1901ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு வழங்கியவர்களுக்கு இந்த விருது கொடுக்கப்படுகிறது.இந்த நிலையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்தாண்டுக்கான நோபல் பரிசு பெறப்போகும் விருதாளர்களின் பெயர்கள், இன்று முதல் நாள்தோறும் ஒவ்வொரு துறையாக அறிவிக்கப்பட இருக்கிறது. முதல்நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவரின் விபரம் வெளியிடப்பட்டது. இந்தாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மேரி பிரங்கோ, பிரட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமொன் சாகாகுச்சி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நோபல் பரிசு கமிட்டி அறிவித்துள்ளது. மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழுங்குபடுத்துவது பற்றிய ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்ட நிலையில்,இயற்பியல் - அக்.,7வேதியியல் - அக்.,8இலக்கியம் - அக்.,9அமைதி - அக்.,10பொருளாதாரம் - அக்., 13நோபல் பரிசு பெறுபவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழுடன், ரூ.10.41 கோடி வழங்கப்பட இருக்கிறது.

எதிர்பார்ப்பு

இஸ்ரேல் - ஹமாஸ், இந்தியா - பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளுக்கு இடையேயான போர்களை நிறுத்தியதால், அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுள்ளார். எனவே, அக்.,10ம் தேதி அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kannan Chandran
அக் 06, 2025 19:12

அமைதிக்கான நோபல் பரிசு டிரம்ப்-புக்கு கிடைக்குதோ இல்லையோ , இங்கே உண்ணாவிரதம் இருந்து போரை நிறுத்தியவருக்கு உடனே வழங்க வேண்டும்..


R. SUKUMAR CHEZHIAN
அக் 06, 2025 18:27

அதேபோல சமாதானதுக்கு கான நோபல் பரிசை டிரம்ப், ஒசாமா பின்லேடன் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும்.


Balasubramanian
அக் 06, 2025 18:21

வாழ்த்துக்கள் மருத்துவ சேவை முன்னேறும்! இன்று அனைவரும் அமைதிக்கான நோபல் பரிசை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்


Modisha
அக் 06, 2025 17:30

1091ம் ஆண்டு முதல் ? என்ன ஆச்சு உங்களுக்கு ?


Vasan
அக் 06, 2025 17:48

Spot on. You have pointed out the typo error correctly. Readers, please read the year 1091 in this column as 1901. As you are aware, Nobel prize was first awarded in year 1901.


Vasan
அக் 06, 2025 17:00

Nobel prize for peace to be awarded to Mr.Trump only after 5 years, after ensuring that all the wars that he claims to have stopped do not surface again. If any of them repeats in the next 5 years, he should not be qualified to receive the award.


V K
அக் 06, 2025 16:04

அமைதிகான நோபல் பரிசு டிரம்ப் தாதாவுக்கு கொடுக்கவும் இல்லாவிட்டால் தாத்தா அமைதியா இருக்கமாட்டார்


SANKAR
அக் 06, 2025 16:50

event should have taken place BEFORE 31.01.3025 and application should have been made by that date as per rules.so no chance.posdibly NEXT year in October 2026


SJRR
அக் 06, 2025 15:56

தற்காலிகமாக போரை நிறுத்தினால் நோபல் பரிசு கொடுக்கக்கூடாது. இரு நாடுகளும் பரஸ்பரம் நட்பை தொடர்கிறார்களா என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை