உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மும்பை தாக்குதல், பார்லி தாக்குதலுக்கு காரணம் மசூத் அசார்: ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதி வாக்குமூலம்

மும்பை தாக்குதல், பார்லி தாக்குதலுக்கு காரணம் மசூத் அசார்: ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதி வாக்குமூலம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பாலகோட் பயங்கரவாத முகாமில் இருந்து ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அசார், மும்பை மற்றும் பார்லிமென்ட் தாக்குதலுக்கு திட்டமிட்டான், ' என அந்த அமைப்பின் தளபதியான மசூத் இலியாஸ் காஷ்மீரி கூறியுள்ளான். இதனால், இந்த தாக்குதல்களில் எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் பொய் கூறியுள்ளது அம்பலமாகியுள்ளது.2001 ம் ஆண்டு டிச.,13ம் தேதி பார்லிமென்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் 5 பேர் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புப் படையை சேர்ந்த 8 பேர் வீரமரணம் அடைந்தனர். தோட்டக்காரர் ஒருவரும் உயிரிழந்தார். பாதுகாப்பு படையினர் பதிலடியில் பயங்கரவாதிகள் 5 பேரும் கொல்லப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7p7opvgx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதனைத்தொடர்ந்து 2008 ம் ஆண்டு நவ., 26 ல் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த இரண்டு சம்பவங்களிலும் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருக்கு தொடர்புள்ளது என இந்தியா ஆதாரத்துடன் குற்றம்சாட்டியது. ஆனால் இதனை பாகிஸ்தான் மறுத்துள்ளது. தங்களது மண்ணில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கவில்லை எனத் தெரிவித்து இருந்தது.இந்நிலையில், அந்த பயங்கரவாத அமைப்பின் தளபதியான மசூத் இலியாஸ் காஷ்மீரி பேசிய மற்றொரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவன், ' திஹார் சிறையில் இருந்து தப்பிய பிறகு, மசூத் அசார் பாகிஸ்தானுக்கு வந்தான். பாகிஸ்தானில் உள்ள பாலகோட் அவனுக்கு தளமாக இருந்தது. இங்கிருந்து தான் டில்லி மற்றும் மும்பை தாக்குதலுக்கான திட்டங்கள் தயாரித்து செயல்படுத்தினான்,' எனக்கூறியுள்ளான்.இந்த பாலகோட் பயங்கரவாத முகாம் மீது கடந்த 2019ம் ஆண்டு இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தியிருந்தது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து புகலிடம் அளித்து வருகிறது என்ற இந்தியாவின் குற்றச்சாட்டை நிரூபிப்பது போல் பயங்கரவாதியின் பேச்சு அமைந்துள்ளது. இதுவரை மறுப்பு தெரிவித்துவந்த பாகிஸ்தானுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M Ramachandran
செப் 18, 2025 01:21

மப்டி மொஹமத் என்ற அயயோக்கியானால் தான் மசு த்து ஆஜர் தப்பிக்க வைக்க பட்டான்


ManiMurugan Murugan
செப் 17, 2025 23:25

ஜெய்ஸ் இ முகமது தலைவன் அந்த அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்று இந்தியா அமெரிக்கா கூறிய பிறகும் பாகிஸ்தான் பொய் சொல்வது தவறு இப்படி பயங்கரவாதத்தை வளர்ப்பதில் இஸ்லாமிய நாடுகள் விருப்பம் காட்டுவது ஏனோ


RAJ
செப் 17, 2025 21:06

எங்கேடா அவனை காணோம்... யாரு பாக்கெட்ல கைய உட்டுக்கிட்டு சுத்துவனே ... அவனையா தேடுற.. .. எங்க.. ஒளறிக்கிட்டு / ஒளிஞ்சுக்கிட்டு இருக்கனோ


தமிழ்வேள்
செப் 17, 2025 20:57

இஸ்ரேல் ஆக இருந்தால், இந்த ஒற்றை ஸ்டேட்மெண்ட் ஐ வைத்தே பாகிஸ்தானை சுடுகாடு ஆக்கி விடும்.... இஸ்ரேல் டா....


மாபாதகன்
செப் 18, 2025 13:04

ஒரு காலத்தில் இஸ்ரேல் கானான் என்று ஒரு தேசம் இருந்ததாக வரும் காலங்களில் மாணவர்கள் புத்தகங்களில் மட்டும் படிப்பர்.


நிக்கோல்தாம்சன்
செப் 17, 2025 19:38

எவ்ளோ சொன்னாலும் பாகிஸ்தானியர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் அவர்களுக்கு ஒரே அப்பா என்று கூறினாலும் நம்ப முடியாது . இப்போ புது அப்பா வேற வந்திருக்காரு , இவரு அங்க போயி இன்வெஸ்ட் பண்ணியிருப்பாரு என்று தான் நினைக்க தோன்றும்


Mohanakrishnan
செப் 17, 2025 18:57

But our Rahul is very confident it is not pakistan terrorist Congressism is bent on to blame indian people only


Arjun
செப் 17, 2025 18:50

இங்கே உள்ள பாகிஸ்தான் கைத்தடிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்


Nandakumar Naidu.
செப் 17, 2025 17:38

India must go Israeli way eliminate this terrorist and his entire network.


புதிய வீடியோ