உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனா ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து; 5 பேர் பலி: 6 பேர் மாயம்

சீனா ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து; 5 பேர் பலி: 6 பேர் மாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீனாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் மாயமாகி உள்ளனர்.கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த தொழிற்சாலையில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 17 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த வெடி விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரூர் ரங்
மே 27, 2025 22:08

பெரும்பாலான மருந்து மூலப்பொருள் வேதிப் பொருட்களை பாரதம் அங்கிருந்துதான் இறக்குமதி செய்கிறது. இங்கு இதுபோன்ற விபத்து நடந்தால் ஸ்டெர்லைட் மாதிரி அரசியல் கலாட்டா செய்து மூட வைத்து விடுவார்கள். அவர்கள் முன்னேறவும் நாம் பின்னேறவும் இதுதான் காரணம்.


Ramesh Sargam
மே 27, 2025 21:13

பாகிஸ்தானுக்கு உதவி செய்தால் இந்த கதிதான். இதுதான் கர்மா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை