உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் துறைமுகத்தில் வெடி விபத்து; பலி 28 ஆக உயர்வு

ஈரான் துறைமுகத்தில் வெடி விபத்து; பலி 28 ஆக உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: ஈரான் நாட்டின் தென்பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.மேற்காசிய நாடான ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் நகருக்கு அருகே உள்ளது ராஜேய் துறைமுகம். பாரசீக வளைகுடாவில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள இந்த துறைமுகம் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும், 8 கோடி டன் அளவுக்கு பொருட்கள் கையாளப்படுகின்றன.இந்நிலையில், நேற்று இந்த துறைமுகத்தில் இருந்த கன்டெய்னரில் இருந்து திடீரென மர்மபொருள் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுதும் கரும்புகை ஏற்பட்டது. பல கி.மீ,, தொலைவுக்கு இதன் அதிர்வு உணரப்பட்டது. வெடி விபத்தை தொடர்ந்து துறைமுகத்தில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 700க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். வெடி விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதனால் காரணம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Nagarajan D
ஏப் 27, 2025 14:13

எந்த தீவிரவாதிக்கு வந்த குண்டுகளோ... துறைமுகத்தையே முடிந்துவிட்டது..


அப்பாவி
ஏப் 27, 2025 08:59

மத்தியஸ்தம் அப்புறம் பண்ணலாம். முதல்ல உங்க உள்நாட்டு மூர்க்கர்களை புடிங்க. ஊரையே கொளுத்திருவாங்க.


Barakat Ali
ஏப் 27, 2025 08:57

இவங்கதான் இந்தியா பாகிஸ்தானுக்கு நடுவுல மத்யஸ்தம் பண்ண ரெடியா இருக்காங்க ....


சமீபத்திய செய்தி