உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!

ஈரான் துறைமுக வெடி விபத்து பலி 65 ஆக உயர்வு; விபத்துக்கான காரணத்தில் மர்மம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: ஈரான் நாட்டின் தென்பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், பலி எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது.மேற்காசிய நாடான ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் நகருக்கு அருகே உள்ளது ராஜேய் துறைமுகம். பாரசீக வளைகுடாவில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள இந்த துறைமுகம் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும், 8 கோடி டன் அளவுக்கு பொருட்கள் கையாளப்படுகின்றன.இந்த துறைமுகத்தில் இருந்த கன்டெய்னரில் இருந்து திடீரென மர்மபொருள் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுதும் கரும்புகை ஏற்பட்டது. பல கி.மீ,, தொலைவு இதன் அதிர்வு உணரப்பட்டது. இந்த விபத்தில், பலி எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது. 750க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இந்த தீ விபத்து மற்றும் அதை தொடர்ந்த வெடி விபத்துக்கு என்ன காரணம் என்பது, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், ஏவுகணைகளுக்கான எரிபொருட்கள் தீப்பிடித்து, விபத்து நடந்திருக்க வேண்டும் என தகவல் வெளியாகி உள்ளது. விபத்துக்கான காரணத்தை ஈரான் அரசு மூடி மறைத்து வருகிறது. இதனால் விபத்து ஏற்பட்ட காரணத்தில் மர்மம் நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mecca Shivan
ஏப் 29, 2025 20:48

பாகிஸ்தான்தான் காரணமாக இருக்கும்.. ஏனென்றால் ஷியாவிற்கு எதிரான நாடு பாகிஸ்தான்..


djivagane
ஏப் 29, 2025 12:56

இஸ்ரேலின் சதி


thehindu
ஏப் 29, 2025 08:56

இதேபோல் காஸ்மீர் தாக்குதலும் மிடி தலைமையில் இந்தியா உலகோடு அழகாக சங்கமித்துவிட்டதைத்தான் காட்டுகிறது


sundarsvpr
ஏப் 29, 2025 08:56

விபத்துகள் தாக்குதலுக்கு காரணம் கண்டுபிடிப்பதில் எந்த பிரயோசனம் இல்லை. எல்லாவற்றிக்கும் காரணம் உலக ஜீவராசிகளை படைத்த ஆண்டவன். நம்மை கடிக்க வந்த பாம்பை கொல்ல நமக்கு உரிமை இல்லை. கடவுளுக்கு அடிமை என்ற சித்தாந்தம் குறைய குறைய அனாவசியங்கள் நடப்பதை தடுக்க இயலாது. தப்பு செய்கிறவன் மீள மீள தவறு செய்கிறான் என்றால் ஆன்மிக பலம் குறைகிறது. இதனை அரசுகள் உணரவேண்டும்.


thehindu
ஏப் 29, 2025 08:55

காஸ்மீர் தாக்குதலிலும் இனியும் காரணம் கண்டுபிடிக்கவில்லை . கட்டுக்கதைகள்தான் பரப்பிவிடப்படுகின்றன


சந்திரசேகரன்,துறையூர்
ஏப் 29, 2025 09:00

உன்னைப் போன்ற தாய் நாட்டை அந்நியருக்கு காட்டிக் கொடுக்கும் தேச துரோகிகள்தான் அந்தக் கட்டுக் கதைகளுக்கு மூல காரணம்...


srini
ஏப் 29, 2025 09:17

would like to take stringent action against this flithy creature


Rajamani K
ஏப் 29, 2025 10:08

பாகிஸ்தான் காட்டுமிராண்டிகள். இதை இந்தியக் காட்டுமிராண்டிகள் ஒத்துக்க மாட்டாங்க. அப்படி மூளைச் சலவை.


thehindu
ஏப் 29, 2025 22:29

மோடியைப்போலவே கூஜாக்கள் கொத்தடிமைகள் பலர் விரக்தியில் உளறுகின்றனர்


abdulrahim
ஏப் 29, 2025 08:50

இஸ்லாமிய நாடுகளில் பிரச்சினை என்றால் யாருக்கோ தீனி போட வேண்டி ....


Arunkumar,Ramnad
ஏப் 29, 2025 09:03

இந்தியாவில் வாழும் இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உனக்கு எப்படி குளு குளுன்னு இருக்குமோ அது போல்தான் இஸ்லாமிய நாடுகளில் நடக்கும்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை