உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி

அமெரிக்காவில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில், வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட விபத்தில், 18 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் டென்னிசி கிராமப்புறத்தில் ஒரு ராணுவ வெடிமருந்து ஆலை செயல்பட்டு வருகிறது. அங்கு திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பல மைல்களுக்கு அப்பால் உள்ள வீடுகளையும் உலுக்கியது. இந்த விபத்தில் ஒரு கட்டடம் இடிந்து தரைமட்டம் ஆனது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இடிந்த தரைமட்டமான கட்டடங்களில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. ''நாங்கள் எங்களது வீடு இடிந்து விழுந்தது போல் உணர்ந்தோம். பெரிய வெடி சத்தம் கேட்டது'' என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என டென்னிசி கவர்னர் பில் லீ தெரிவித்தார். அவர், இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்யுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Raj
அக் 11, 2025 18:15

அமெரிக்கா வாழ தகுதி இல்லாத நாடாக மாறி வருகிறது.


Senthoora
அக் 11, 2025 17:10

தலைவலியும், வயிற்றுக்குத்தும் அவனவனுக்கு வந்தாதான் தெரியும், ஹாலிவுட்டில் நெருப்பு அனர்த்தம் பார்தாங்க, இப்போ குண்டு வெடிக்கிறது பார்க்கிறாங்க, இன்னும் பார்க்கணும் அப்போதான் மற்றவனுக்கு குண்டுபோடும்போது என்ன வலி என்று புரியும்.


nisar ahmad
அக் 11, 2025 16:48

மதப்பித்தம் தலைக்கேரியிருக்கும் சங்கிகளின் விமர்சனங்கள்


Pandi Muni
அக் 11, 2025 16:01

வெள்ளை மாளிகையில மூர்க்கனுங்களுக்கு விருந்து வச்சப்பவே தெரியும்டா அமெரிக்காவுக்கு அஸ்தமனம்னு.


JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 11, 2025 15:07

கேஸ் சிலிண்டர் வெடிவிபத்தாக இருக்கலாம். எங்கள் நாட்டில் எல்லாம் நாங்கள் அப்படித்தான் கூறுவோம்


Sun
அக் 11, 2025 13:57

அவங்க ராசி அப்படி! வெள்ளை மாளிகைலே பாகிஸ்தான் தளபதி, பாகிஸ்தான் பிரதமர்க்கு வலிய கூப்பிட்டு விருந்து கொடுத்தியே? அவங்க கால் வச்சால வெளங்காது. இதுல வலிய கூப்பிட்டு விருந்து வேற குடுத்தா?


கடல் நண்டு
அக் 11, 2025 12:28

அமெரிக்கா வின் போதாத காலம் ... டிரம்ப் ஆல் மட்டுமல்ல, சில இது போன்ற விபத்துக்களும் கூட..


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 11, 2025 12:25

மர்மப்பொருள் ங்கிற வார்த்தையே இல்லீங்களே ????


V K
அக் 11, 2025 12:20

வெள்ளிக்கிழமை யா அப்போ சரி


M Ramachandran
அக் 11, 2025 12:11

எல்லா ஜோதிடர் களுமே இந்த வருட இறுதிக்குள் பல பல இடர் பாடுகள் நடக்கும் என்றுஅதுவும் நவம்பர் மாதம் அதிக மாக பாதிக்கும் என்று மழை மற்றும் மலை பிரதேசஙகள் நிலச்சரிவுகள் பூகம்பம் மற்றும் மழை பொழிவினாலும் இயற்கை இடர்கள் நடக்கும். முடிந்த வரைய்ய எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை