உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஐ.நா. கூட்டத்தில் 20 உலக நாடுகளின் தலைவர்கள் என்னை சந்திக்க விரும்புகின்றனர்: டிரம்ப் ஆவல்

ஐ.நா. கூட்டத்தில் 20 உலக நாடுகளின் தலைவர்கள் என்னை சந்திக்க விரும்புகின்றனர்: டிரம்ப் ஆவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியுயார்க்; ஐநா சபைக் கூட்டத்தில் 20 நாடுகளின் தலைவர்கள் தம்மை சந்திக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.ஐநா சபை கூட்டத்தொடரில் உயர்மட்ட பொது விவாதம் செப்.23ம் தேதி தொடங்கி செப்.29ம் தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செப்.23ம் தேதி உரையாற்றுகிறார்.இந் நிலையில், டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது: ஐ.நா.வில் நிறைய நாடுகளின் தலைவர்களை நான் சந்திக்கப் போகிறேன். அநேகமாக 20 பேரை சந்திப்பேன். அனைவரும் என்னை சந்திக்க விரும்புகிறார்கள். நாங்கள் இப்போது ஆப்கானிஸ்தானுடன் பேசிக்கொண்டிருக்கிறோம், அதை (பாக்ராம் விமானப்படைத்தளம்) நாங்கள் திரும்பப் பெற விரும்புகிறோம்.விரைவில் அதை நாங்கள் திரும்பப் பெற விரும்புகிறோம். அவர்கள் (தாலிபான்கள்) அதை செய்யாவிட்டால், நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார். பாக்ராம் விமானப்படைத் தளத்தின் பின்னணி; 2001ம் ஆண்டில் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பதிலடியாக, அதற்கு காரணமாக இருந்த பயங்கரவாதி பின்லேடனை அமெரிக்கா வேட்டையாடியது. பின்லேடன் உயிருடன் இருக்கும் போது அவனை ஒப்படைக்க ஆப்கானிஸ்தானை அப்போது ஆண்டு வந்த தாலிபான்கள் மறுத்ததால் அங்கு போர் தொடுத்து, அவர்களை ஆட்சியில் இருந்து அமெரிக்கா விரட்டியது. பின்லேடனை அழித்த பின்னர், 2021ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமானப் படைத் தளத்தில் இருந்து அமெரிக்க வீரர்கள் சொந்த நாடு திரும்பினர். அதன் பின்னர் தாலிபான்கள், ஆப்கானிஸ்தான் அரசை திரும்பவும் கைப்பற்றினர். பாக்ராம் விமானப்படைத் தளத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.2021ம் ஆண்டுக்கு பின்னர் இப்போது மீண்டும் பாக்ராம் விமானப் படைத் தளம் பற்றி டிரம்ப் பேசியிருப்பது, முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. டிரம்பின் இந்த எச்சரிக்கையை தாலிபான் அரசு புறம்தள்ளி உள்ளது. தங்கள் நாட்டின் பாக்ராம் விமானப் படைத் தளத்தை அமெரிக்கா மீண்டும் கைப்பற்ற முடியாது என்று தாலிபான் அரசு திட்டவட்டமாக மறுத்து இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Shivakumar
செப் 21, 2025 15:54

உன்னை மாதிரி கோமாளியை பார்க்க 20 உலக நாடுகளின் தலைவர்கள் விரும்புகின்றனர் என்று சொல்லு.. அமெரிக்காவின் வரலாற்றில் உன்னை மாதிரி யாரும் இருந்தது இல்லை இனி இருக்க போவதும் இல்லை. உன் பேச்சுக்கு எல்லாரும் அடிபணியனும் என்று நினைப்பது புத்திசாலித்தனம் இல்லை மண்டைக்கனம்.


Ramesh Sargam
செப் 21, 2025 13:01

ஆமாம். சந்திப்பின்போது டிரம்பிடம் ஏன் வரி, விசா, நோபல் பரிசு, போர் என்று ஏதாவது நாளுக்குநாள் ஏதேதோ அறிவிப்புகளை விட்டு ஆட்சி புரிகிறாய் என கேர்க்கப்போகிறார்கள்.


KRISHNAN R
செப் 21, 2025 12:55

ய்யோ பாவம்.... மந்திரிச்சு விடுங்க பிளீஸ்


Rajasekar Jayaraman
செப் 21, 2025 11:53

தற்பெருமையில் பீத்திக் கொள்ளும் அமெரிக்காவில் .....


தத்வமசி
செப் 21, 2025 11:04

திருவாளர் திரம்ப்பருக்கு பெருமைக்கும் சன்மானத்திர்க்கும் ஆசை வந்துள்ளது. அதனால் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து அவ்வப்போது ஏதாவது ஒரு நாடு அவருக்கு பட்டமும் சன்மானமும் கொடுங்கள். அமைதியாகி விடுவார்.


நிக்கோல்தாம்சன்
செப் 21, 2025 09:49

புதிய நேட்டோவிற்கு அடித்தளம் போட்டுவிட்டாய் ட்ரம்ப், இனி அமேரிக்கா, பிரிட்டன் போன்றவை அரபு நாடுகளின் அடிமை ஆகும் காலம் வெகுதொலைவில் இல்லை, நாடு பிடிக்கும் இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற இரு மதங்கள் இந்த பூமி பந்தின் அழிவை நோக்கி எடுத்து செல்லும்


pmsamy
செப் 21, 2025 09:00

டிரம்ப் பணக்காரனா இருக்கலாம் ஆனா அரசியலும் தெரியல பிசினஸும் தெரியல நீ உபயோகப்பட மாட்ட , நீ பண்றது எல்லாம் முட்டாளதனமா இருக்கு அப்படின்னு சொல்றதுக்கு தான் பல நாடுகள் உன்ன பாக்க வராங்க


RAJ
செப் 21, 2025 08:38

அமெரிக்கா பாவம்.. ஒரு சூனியக்காரன் கைல மாட்டிகிட்டு அல்லோகலப்படுது.. ..


Saai Sundharamurthy AVK
செப் 21, 2025 08:29

மோடிஜி அங்கு போகப் கூடாது.


முக்கிய வீடியோ