உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கடன் மோசடி செய்த மெஹூல் சோக்சி பெல்ஜியத்தில் கைது

கடன் மோசடி செய்த மெஹூல் சோக்சி பெல்ஜியத்தில் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் பெல்ஜியத்தில் கடன் மோசடி செய்த மெஹூல் சோக்சி கைது செய்யப்பட்டுள்ளார்.மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்சி உள்ளிட்டோர், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 2018ல் வெளிநாடு தப்பினர். இது தொடர்பாக அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fef7pzcp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நீரவ் மோடி, லண்டனில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், நீரவின் சொத்துக்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்து விட்டது. மெஹூல் சோக்சி மனைவி பிரீத்தி சோக்சி பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர்.அவர் மூலமாக சோக்சி பெல்ஜியம் குடியுரிமை பெற்று தங்கி உள்ளார். இது தற்காலிக குடியுரிமை என்றும், ஒருவேளை பெல்ஜியத்தின் நிரந்தர குடியுரிமையை சோக்சி பெற்றால் அவர் எளிதாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வர முடியும்.இதனால், சோக்சியை பெல்ஜியத்தில் இருந்து நாடு கடத்த இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். இது தொடர்பாக பெல்ஜியம் அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் பேச்சு நடத்தினர். இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் பெல்ஜியத்தில் மெஹூல் சோக்சி கைது செய்யப்பட்டுள்ளார்.மத்திய புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ.,) கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Rasheel
ஏப் 14, 2025 15:49

ஐரோப்பிய நாடுகள் திருடர்களுக்கு, ஜிஹாதிகளுக்கும் அடைக்கலம் தருகின்றன. அங்கு குடிபுக பணம் வங்கி டெபாசிட் இருந்தால் போதும். மில்லியன் டாலர்கள் டெபாசிட் செய்தால் அங்கு வழக்குரைஞர்களை வைத்து வாதாடி உடல் நிலையை காரணம் காட்டி தப்பிக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சட்டங்கள் வழி செய்கிறது. இதனால் தான் திருடர்களும் ஜிஹாதிகளும் ஈஸி ஆக அடைக்கலம் ஆகிறார்கள்.


Ramesh Sargam
ஏப் 14, 2025 12:33

பல வருடங்களுக்கு முன்பு பல கோடி மோசடி செய்தவன் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை. ஆனால் நேற்று பிக்பாக்கெட் அடித்தவன் இன்று சிறைச்சாலையில் தண்டனை அனுபவிக்கிறான். பிக்பாக்கெட் குற்றவாளியும் தண்டிக்கப்படவேண்டும். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் பல கோடி மோசடி செய்தவர்கள் ஏன் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை? காவல்துறை, நீதிமன்றம் சரியாக செயல்படுகிறதா நம்நாட்டில்? சந்தேகம்தான்...


பல்லவி
ஏப் 14, 2025 16:04

முழு குடும்பமும் மோ. பெயர் வைத்து ரூ 12636 கோடி pnb வாங்கியில் 2018 ஆண்டு கடன் வாங்கி பல நாடுகளில் தப்பி பிழைத்த கும்பல் சுவிட்சர்லாந்து நாட்டு க்கு செல்லும் போது பிடிக்கப்பட்டு விட்டது , இன்னும் அதே பெயரில் அநேகம் பேர் கோடிக்கணக்கில் பணம் கடன் வாங்கி ஆட்டைய போடுகிறார்கள்


Dharmavaan
ஏப் 14, 2025 17:31

வெளி நாட்டு சட்டங்கள்


m.arunachalam
ஏப் 14, 2025 12:13

குடும்ப சொத்து முழுவதும் பறிமுதல் செய்து 18 வயது நிரம்பிய அனைத்து குடும்ப உறுப்பினர்களையும் தூக்கில் போட வேண்டும் .


Sampath Kumar
ஏப் 14, 2025 11:43

திருட்டு களவாணி குஜுபைகள் இவனுக உத்தமர்கள் மற்றவர்கள் அய்யோக்கியர்கள் எங்க உங்க நிலை பாடு சுத்த விளங்காமட்டைகள் பிஜேபி சொம்புகள் அடக்கி வசிப்பது உங்களுக்கு நல்லது


வாய்மையே வெல்லும்
ஏப் 14, 2025 14:28

தேவையே இல்லாமல் சம்பத்து குதிக்கிறார் என்றால் கண்டிப்பாக இவருக்கு வேண்டப்பட்டவர் ஈடி ரைடில் வசமாக வெச்சி செய்யிறாங்க போல இருக்கு. திருடன் தண்ணி குடிச்சு தான்ஆகணும். ஓடி ஊழியமும் முடியாது மாதவன் உத்தமன் கதையும் அளக்கலாகாது ஹா ஹா ஹா


hariharan
ஏப் 14, 2025 11:10

அந்த சார் யாரு? எங்கே இருக்கிறார்? செ.பா தம்பி 2 வருடமாக யாருடைய பாதுகாப்பில் இருந்தார்? மல்லையா எப்பொழுது கைதாவார்?


ஆரூர் ரங்
ஏப் 14, 2025 11:00

விடியலுக்கு நெருக்கமான மண்ணு லாரி டிரைவர் பாலு ஒரு காலத்தில் தேசீயமயமாக்கபட்ட வங்கியில் பெற்ற பெருங் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றினார். ஆனால் தப்பித்துச் செல்ல முயலவில்லை. அதுதான் அரசியல் செல்வாக்கின் அடையாளம்.


Naga Subramanian
ஏப் 14, 2025 10:12

எடுத்துக்கொண்டு ஓடினால் தொழிலதிபர்கள். அசையாமல் நின்றால் அரசியல் வியாதிகள். ஆக இருவரையுமே பிடிக்க முடியாது. இதுதான் வேற்றுமையில் ஒற்றுமை


G Mahalingam
ஏப் 14, 2025 09:53

தொழில் அதிபர்கள் என்றால் கடன் வாங்கி தான் வியாபாரத்தை பெருக்க முடியும். அமெரிக்க தொழில் அதிபர்களும் கடன் வாங்கி இருக்கின்றனர். ஆனால் திமுக தொழில் அதிபர்கள் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. வரி ஏய்ப்பு செய்து முதலீட்டை பெருக்கி கொள்கிறார்கள்.


Raghavan
ஏப் 14, 2025 12:18

வரி ஏய்ப்பு 25% கமிஷன் கரெப்ஷன் பித்தலாட்டக்கணக்கு மீதி 75%. அமைச்சர்கள் வாங்கும் சம்பளம் மற்றும் சலுகைகளுக்கு வரியும் கிடையாது மண்ணும் கிடையாது .


Thetamilan
ஏப் 14, 2025 09:10

அதானியைப்போல் பல இடங்களால் கடன் வாங்கி பல போலி கம்பனிகள் வைத்து மாற்றி மாற்றி கட்டிக்கொள்ளவேண்டும். அரசின் துணையுடன் நாட்டில் கொள்ளையடிக்க வேண்டும் நாட்டை விற்கவேண்டும் . இவருக்கு கொள்ளையடிக்க இந்து மதவாத அரசின் துணையில்லாமல் போனது ஏனோ ?


வாய்மையே வெல்லும்
ஏப் 14, 2025 10:46

திராவிடமாடல் எல்லா வழிகளிலும் லஞ்ச லாவண்ய பற்றி பேச துணிவில்லாத வக்கற்ற ஆட்கள் தான் தேவையில்லாத அதானி அம்பானி ... எடுக்க நினைப்பார்கள். இவ்வளவு கூவுறீங்களே உங்க கிட்டாதான் படித்த? கறைபடியாத வக்கீல்கள் சிதம்பரம் காபூல் ரோஜா கபில் சிபல் இத்யாதிகள் இருக்கிறார்களே. முடிந்தால் அதானி அம்பானி மீது வழக்கு போடுங்க பாப்போம் .??


ராமகிருஷ்ணன்
ஏப் 14, 2025 08:51

நிச்சயம் மத்திய அரசை பாராட்டி வேண்டும் இனிமேல் கடனை அடைக்க முடியாமல் ஓடுபவர்கள் வெளி கிரகங்களுக்கு தான் ஓடனும். அதெல்லாம் சரி, கண் முன்னே லஞ்சம், ஊழல் செய்து ED யிடம் மாட்டிக் கொண்டவர்கள் தண்டனை அடைய ஏன் தாமதம். அதையும் விரைவாக செய்தால் நல்லது.


Davamani Arumuga Gounder
ஏப் 14, 2025 10:43

ஏனெனில் .. அவர்கள் எல்லாம் மக்களின் ஆதரவை பெற்ற அரசியல் கட்சிகளின் வியாதிகளின் வழித்தோன்றல்கள் ..


முக்கிய வீடியோ