உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மெக்சிகோ சிறையில் கைதிகளுக்குள் கலவரம்; மோதலில் 7 பேர் அடித்துக் கொலை

மெக்சிகோ சிறையில் கைதிகளுக்குள் கலவரம்; மோதலில் 7 பேர் அடித்துக் கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டக்ஸ்பான்: மெக்சிகோவில் சிறையில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட கலவரத்தில் 7 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இதுபற்றிய விவரம் வருமாறு; மெக்சிகோ நாட்டில் வெராக்ரூஸ் மாகாணத்தில் டக்ஸ்பன் சிறை உள்ளது. இந்த சிறையில் ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில், கைதிகளுக்கும், கிரிமினல் கும்பலான க்ரூபோ சோம்ப்ராவுக்கும் இடையே கலவரம் மூண்டது. க்ரூபோ சோம்ப்ரா கும்பலானது மற்ற கைதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை மிரட்டி பணம் பறிந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த கலவரத்தின் போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். சிறைச்சாலையின் உள்ளே கைதிகள் சிலர் தீ வைத்தனர். கலவரத்தில் சிக்கியவர்களில் 7 கைதிகள் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறையில் மூண்ட கலவரம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ரங்ஸ்
ஆக 05, 2025 16:03

சிறை வாசம் நரகம் தான் போலிருக்கிறது. யாராவது நல்லவர்கள், அப்பாவிகள் ஏதோ சந்தர்ப்பத்தில் தவறு செய்து தண்டிக்கப்பட்டு சிறை சென்றால் வாழ்க்கை அதோடு முடிந்தது. பாவம்.


Jack
ஆக 05, 2025 15:09

எல் சால்வடோர் சிறையில் இந்த மாதிரி கும்பல்களை அடைக்க வேண்டும்