உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மொத்த ஊழியர்களில் 4 சதவீதம் பேர் பணி நீக்கம்: மைக்ரோசாப்ட் அறிவிப்பு

மொத்த ஊழியர்களில் 4 சதவீதம் பேர் பணி நீக்கம்: மைக்ரோசாப்ட் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.அமெரிக்காவின் பில் கேட்ஸ் மற்றும் பால் ஆலன் ஆகியோரால் 1975ம் ஆண்டு தொடங்கப்பட்ட பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், மென்பொருள், நுகர்வோர் மின்னணு பொருட்கள், தனிப்பட்ட கணினிகள் மற்றும் அது தொடர்பான சேவைகளை உருவாக்கி, விற்பனை செய்துவருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கை:மாறி வரும் சந்தையில் வெற்றிபெற நிறுவனத்தையும், அதன் குழுக்களையும் சிறப்பாக நிலைநிறுத்த தேவையான மாற்றங்களின் அடிப்படையில், நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.கடந்த ஜூன் மாதம் வரை எங்களது நிறுவனத்தில் 2,28,000 முழுநேர ஊழியர்களைப் பணியமர்த்தி உள்ளோம். அதிலிருந்து 4 சதவீதம் பேரை குறைக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி பார்த்தால் 9 ஆயிரம் பேர் வரை நீக்கப்படலாம். கடந்த மே மாதம் 6 ஆயிரம் பேர் வரை பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து தற்போது பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த பணி நீக்கம் அதன் விற்பனைப் பிரிவு மற்றும் அதன் எக்ஸ்பாக்ஸ் வீடியோ கேம் வணிகம் உட்பட உலகெங்கிலும் உள்ள பல குழுக்களை பாதிக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தாமரை மலர்கிறது
ஜூலை 02, 2025 23:38

அமெரிக்காவில் வேலை போனால் என்ன? என்ன வளம் இல்லை பிஜேபி ஆளும் இத்திருநாட்டில், ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில்? இந்தியாவில் ஐடி ஊழியர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு திரும்புவதால், ரிவர்ஸ் பிரைன் ட்ரைன் ஆகிறது. இந்தியாவிலேயே மிக நன்றாக சம்பாரிக்கும்போது, அமெரிக்காவில் ஆடு மேய்க்க வேண்டிய அவசியமென்ன?


பெரிய குத்தூசி
ஜூலை 02, 2025 22:19

எண்ணிக்கையில் 9 ஆயிரம் என்பது 25000 பேர் வரை அதிகரித்து உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாப்ட் தொழிலாளர்கள் பாதிக்கப்படலாம். ஆகவே இந்தியாவில் உள்ள மைக்ரோசாப்ட் ஊழியர்கள் தயாராக இருக்கவும். மைக்ரோசாப்ட் ஏற்கனவே மாதத்திற்கு 1000 பேரை வீட்டிக்கு அனுப்பி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் மட்டும் அமெரிக்காவில் குடியுரிமை வாங்கிய சுமார் 200 குடும்பத்திற்கு மேல் சென்னை வெஸ்ட் மாம்பலம் பகுதியில் வந்து செட்டில் ஆகிவிட்டார்கள். வாய தொறதா அமெரிக்கன் சிடிஸின் னு பீத்துறாங்க. ஏன் அப்புறம் இங்கே வந்தகென்னு தெரியலே. இனி அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வேலைவாய்ப்புகள் இல்லை. அனைத்தும் செயற்கை நுண்ணறிவு எடுத்துக்கொண்டு விட்டது. ஆகவே இனி ஊறுகாய் பிசினஸ் பற்றி யோசிக்கலாம்.


Ramesh Sargam
ஜூலை 02, 2025 21:12

Name of the company is Microsoft. But its decisions are Major Shock to many of its employees.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை