உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானுக்கு குட்பை சொன்ன மைக்ரோசாப்ட்; 25 ஆண்டுகளாக செயல்பட்ட நிறுவனம் மூடல்

பாகிஸ்தானுக்கு குட்பை சொன்ன மைக்ரோசாப்ட்; 25 ஆண்டுகளாக செயல்பட்ட நிறுவனம் மூடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 25 ஆண்டுகளாக இயங்கி வந்த தமது கிளை அலுவலகத்தை மைக்ரோசாப்ட் மூடியுள்ளது. பிரபல தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் 2023ம் ஆண்டுக்கு பின்னர், ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகிறது. கிட்டத்தட்ட 9100 ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. இது ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் 4 சதவீதம் ஆகும். இந் நிலையில், பாகிஸ்தானில் உள்ள தமது கிளை அலுவலகத்தை மைக்ரோசாப்ட் மூடுவதாக அறிவித்துள்ளது. உலகளாவிய மறுசீரமைப்புக்கு மாறுவதாக அந்நிறுவனம் கூறி உள்ளது.அலுவலகம் மூடப்பட்டதை பாகிஸ்தான் மைக்ரோசாப்ட் முன்னாள் நிறுவனர் ஜாவத் ரஹ்மான் உறுதி செய்துள்ளார். இது ஒரு சகாப்தத்தின் முடிவு. தற்போதுள்ள வணிக சூழலே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெளியேற்றத்தை காட்டுவதாக உள்ளது என்று அவர் கூறி உள்ளார்.பாகிஸ்தான் மாஜி அதிபர் ஆரிப் ஆல்வி கூறுகையில், நாட்டின் பொருளாதாரத்தை அசைக்கும் ஒருவித அறிகுறி தான் என்று தெரிவித்துள்ளார். எங்கெல்லாம் தங்கள் நிறுவனம் மேலும் வளர்வதற்கு சாத்தியமும், வாய்ப்பும் இல்லையோ அங்கெல்லாம் தமது இயக்கத்தை நிறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் பொருளாதார மந்த நிலை தொடர்ந்து நீடிக்கிறது. பயங்கரவாத இயக்கங்களுக்கு அந்நாட்டு அரசு ஆதரவு அளிப்பதும், சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதும் இத்தகைய முடிவுகளுக்கு காரணமாக இருப்பதாக, விமர்சகர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Srinivasan Narayanasamy
ஜூலை 05, 2025 04:54

என்னுடன் பணிசெய்யும் ஒரு பாகிஸ்தான் ஒருவர் சொன்னது : " பாகிஸ்தான் மே ஜீனா பகுத் முஸ்கில்ஹே ஜீ " பாகிஸ்தானில் வாழ்வதே மிக கடினம் ஐய்யா


MARUTHU PANDIAR
ஜூலை 05, 2025 01:24

இந்த காட்டுமிராண்டிகளின் நாட்டில் இருப்பது அந்த நிறுவனத்துக்கே பெரிய அவமானம். அவனுவலால் எதிர்காலத்தில் பிரச்சினை தான் .இதில் டிரம்ப் தலையிட்டு பில் கேட்சை தனது எடுபிடிக்காக மிரட்டாமல் இருந்தால் சரி.


ருத்ரன்
ஜூலை 04, 2025 23:37

ஏதாவது துப்பாக்கி தொழிற்சாலையோ அல்லது வெடிகுண்டுகள் தயாரிக்கும் நிலையமோ ஆரம்பிக்க எண்ணம் இருந்தால், உலக நாடுகள் பக்கியை அணுகலாம். மைக்ரோ சாப்ட் இடம் காலியாக உள்ளது.


M Ramachandran
ஜூலை 04, 2025 23:23

ராணுவ கட்டுப்பாட்டுக்குழயிருக்கும் நாடு முன்னேஆறுவது கடினம் அதுவும் மத சார்புடன் ராணுவமும் அரசியலும் செயல்படும்போது முன்னேற்றம் கடினம். தேர் போல் மக்கள் மேல் கடுமையுடன் நடக்கும் சீனாவிற்கும் இனி இறங்குமுகம் தான்.மக்கலிய்ய அடிமைய்யகளாக நடத்தும் கம்யூனிசம் நாடு பிடிக்கும் ஆசையுடன் அலையும் சீனா துண்டு துண்டாக போக வாய்ப்புகள் அதிகம்.


Ramesh Sargam
ஜூலை 04, 2025 22:41

அமெரிக்காவிலேயே அந்த நிறுவனம் பல ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கி சாதனை படைத்துள்ளது. மன்னிக்கவும், ஊழியர்களுக்கு சோதனை கொடுத்துள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை