உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காஷ்மீர் பட்டு கம்பளம், வெள்ளி பணப்பை: சைப்ரஸ் அதிபருக்கு பிரதமர் மோடியின் அன்பு பரிசு

காஷ்மீர் பட்டு கம்பளம், வெள்ளி பணப்பை: சைப்ரஸ் அதிபருக்கு பிரதமர் மோடியின் அன்பு பரிசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நிகோசியா: சைப்ரஸ் நாட்டு அதிபருக்கு காஷ்மீர் பாரம்பரிய கைவினை பொருட்களை பிரதமர் மோடி பரிசாக வழங்கியது பாராட்டுக்களை பெற்றுள்ளது.5 நாட்கள் அரசு முறை பயணமாக சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். முதலில் சைப்ரசில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார். பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான மாக்காரியோஸ் III கிராண்ட் கிராஸ் என்ற விருது வழங்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7bzupow3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமது பயணத்தின் போது சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோ டௌலிடேசுக்கு பிரதமர் மோடி காஷ்மீரில் கைகளால் செய்யப்பட்ட பட்டு கம்பளத்தை பரிசாக வழங்கி உள்ளார்.நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த கம்பளங்கள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள கைவினைக்கலைஞர்களால் நெய்யப்பட்டவை. பாரம்பரியமான சிவப்பு நிறத்தில் உருவாக்கப்பட்டவை.சைப்ரஸ் அதிபரின் மனைவியும், முதல் பெண்மணி என்று அழைக்கப்படுவருமான பிலிப்பா கர்சேராவுக்கு வெள்ளியிலான பணப்பையை பிரதமர் மோடி பரிசாக அளித்துள்ளார். ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த பணப்பை, பாரம்பரிய உலோக வேலைப்பாடுகளைக் கொண்டவை. இந்த பையின் மையத்தில் நேர்த்தியான தோற்றம் அளிக்கும், வகையில், மதிப்பிட முடியாத கல் பதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

காசுகுமார்
ஜூன் 17, 2025 06:35

பணப்பையில் பிட் காயின் போட்டு வெச்சுக்க முடியுமா?


Kasimani Baskaran
ஜூன் 17, 2025 04:06

அருமை... பாரம்பரிய தொழில்கள் வளர்ந்தால் காஷ்மீருக்கு சுபிட்சம் தானே வரும் என்பதை புரிந்துகொண்ட இருக்கும் ஒரு சிலரில் பிரதமரும் ஒருவர்...


சிட்டுக்குருவி
ஜூன் 16, 2025 23:27

காஷ்மீர் மக்களின் திறமையை உலகுக்கு காட்டும் நல்ல வியாபாரதந்திரம் .கண்டிப்பாக காஷ்மீர் கம்பளங்கள் வியாபாரம் விருத்தியடையும் என்று எதிர்பார்க்கலாம் . வாழ்க வளமுடன் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை