உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணித்த பிரதமர் மோடி: போட்டோக்கள் வைரல்!

ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணித்த பிரதமர் மோடி: போட்டோக்கள் வைரல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டோக்கியோ: ஜப்பானில் பிரதமர் மோடி புல்லட் ரயிலில் பயணித்தார். அவருடன் அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவும் சென்றார். 2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ஜப்பான் சென்றிருக்கிறார். அங்கு இரு நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றார். டோக்கியோவில் 16 மாகாண கவர்னர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=09y1vmvy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந் நிலையில், புல்லட் ரயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தார். அவருடன் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவும் பயணித்தார். இந்த பயண விவரத்தை பிரதமர் மோடி தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதேபோன்று, ஷிகெரு இஷிபாவும் பிரதமர் மோடியுடனான பயணத்தை புகைப்படங்களாக தமது எக்ஸ் வலைதள பதிவில் வெளியிட்டுள்ளார். அதில் இந்திய பிரதமர் மோடியுடன் புல்லட் ரயில் பயணம் தொடங்கி இருக்கிறது. சென்டைக்கு புறப்பட்டு உள்ளேன். இருவரும் ஒரே பெட்டியில் பயணிக்கிறோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.சென்டை வந்த பிரதமர் மோடிக்கு ஜப்பான் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜப்பான் ரயில்வேயில் பயிற்சி பெற்று வரும் இந்திய ரயில் ஓட்டுநர்களை சந்தித்து பேசினார். ஜப்பான் பயணத்தை முடித்த பின்னர், பிரதமர் மோடி இன்று (ஆக.30) சீனா செல்கிறார். அங்கு 2 நாள் பயணம் மேற்கொள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Gokul Krishnan
ஆக 30, 2025 15:00

உத்தரகாண்ட் ஹிமாச்சல் பிரதேசத்தில் பெருத்த நில சரிவு கனமழை உயிர் சேதம் பொருள் சேதம் சாலைகள் கடும் சேதம்


Tamilan
ஆக 30, 2025 13:11

அந்நியர்களைப்பற்றிய செய்திகள் இல்லாத நாளே கிடையாது . இது இந்தியாவா தமிழகமா அல்லது அந்நிய நாடா என்ற வித்தியாசமே இல்லாமல் போய்விட்டது . இந்திய அந்நியர்களின் விளையாட்டு மைதானமாகிவிட்டது


V Venkatachalam
ஆக 30, 2025 14:47

தமிழ் யாவாரிங்க கொள்ளையடித்த பணத்தை வெளி நாடுகளில் பதுக்குறானுங்க.


M. PALANIAPPAN, KERALA
ஆக 30, 2025 12:22

இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் எடுத்துச்செல்லும் மோடிஜி வாழ்க


Thravisham
ஆக 30, 2025 11:38

மகாத்மா மோடி உங்களால் பாரததுக்கே பெருமை. வட திருட்டு வாரிசு கட்சியாக இருந்திருந்தால் அமெரிக்காவுக்கு ஸலாம் போட்டு நாட்டை நாச படுத்தியிருப்பார்கள்


Ramesh Sargam
ஆக 30, 2025 11:38

சீனா செல்லும் பிரதமர், அங்கு Maglev Train magnetically elevated train இல் பயணிப்பார். அது புல்லட் ட்ரைனைவிட அதிகவேகம் செல்லும் ட்ரெயின் என்று சொல்வார்கள்.


தமிழன்
ஆக 30, 2025 11:29

வாழ்க வளமுடன் மோடி ஜி , உங்கள் அர்பணிப்பு உணர்வு மற்றும் நாட்டுக்கு செய்து வரும் பணி மிகவும் பாராட்டக்கூடியது நன்றி.


Naga Subramanian
ஆக 30, 2025 11:20

நமது துண்டுச்சீட்ட்டாளரும் அங்கே செல்வார் பாருங்கள். அங்கிருந்து சிங்கப்பூர் வகையறா நாட்டிற்கும் செல்வார். எதர்க்குச் செல்கிறார் அவருக்கே என்பது தெரியாது. ஆனால் கட்டாயம் செல்வார் பாருங்கள். ஹீ...ஹீ...


Ganesh
ஆக 30, 2025 13:12

ஸ்ஸ்ஸ்ஸ்... கம்பெனி சீக்ரடே வெளிய சொல்லாதீங்கப்பா


sivakumar Thappali Krishnamoorthy
ஆக 30, 2025 10:59

மோடிஜி செல்லும் இடம் எல்லாமே சிறப்பு .இந்தியாவிற்கும் பெறுமை.


தியாகு
ஆக 30, 2025 10:57

இந்தியாவில் சுமார் எழுபது வருடங்களுக்கு முன் புல்லட் ரயில் இருந்திருந்தால் யாரும் திருட்டு ரயிலேறி வந்திருக்க முடியாது. தமிழ்நாடும் தப்பி பிழைத்திருக்கும்.


Chess Player
ஆக 30, 2025 11:11

அருமை.


Ganesh
ஆக 30, 2025 13:15

உங்களுக்கு தெரியாது.... அவர்கள் விஞ்ஞான திருடர்கள்... தப்பு கணக்கு போடாதீர்கள்


Kumar Kumzi
ஆக 30, 2025 13:26

இப்போது ஓங்கோலுக்கு புல்லட் ட்ரெயின் அனுப்பும் அளவுக்கு வசதி வந்துவிட்டது


புதிய வீடியோ