உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் முர்மு

போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் முர்மு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாட்டிகன் சிட்டி: கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ், ஐரோப்பிய நாடான இத்தாலியின் வாட்டிகன் சிட்டியில் கடந்த 21ம் தேதி காலமானார். அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக, அங்குள்ள புனித பீட்டர்ஸ் சர்ச்சில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி சடங்கு இன்று நடக்கிறது.இதில் பங்கேற்பதற்காக, நம் ஜனாதிபதி திரவுபதி முர்மு, வாட்டிகன் சிட்டிக்கு நேற்று சென்றார். அங்கு போப் பிரான்சிஸ் உடலுக்கு, அவர் அஞ்சலி செலுத்தினார். அவருடன் பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, சிறுபான்மையினர் விவகாரத்துறை இணைஅமைச்சர் ஜார்ஜ் குரியன் சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ