உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேலுக்கு எதிராக அணி திரளும் முஸ்லிம் நாடுகள்

இஸ்ரேலுக்கு எதிராக அணி திரளும் முஸ்லிம் நாடுகள்

தோஹா: இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாகவும், எதிர் காலத்தில் இது போன்ற தாக்குதலை தடுக்க வழிமுறைகளை கண்டறியவும், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாட்டை கத்தார் நடத்துகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இ டையேயான போர் இரண்டு ஆண்டுகளாக நடக்கிறது-. போர் நிறுத்த முயற்சியில், முக்கிய மத்தியஸ்தராக கத்தார் உள்ளது. கடந்த வாரம் கத்தாரின் தோஹாவில், ஹமாஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் நடத்தியதில், 5 ஹமாஸ் தலைவர்களும், கத்தார் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டனர். இதற்கு கத்தார் மற்றும் பிற நாடுகள் கண்டனம் தெரிவித்தன. கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி கூறுகையில், “சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இது அரசு பயங்கரவாதம். போர் நிறுத்தம் குறித்து கத்தார் பேச்சு நடத்திய நேரத்தில் நடத்தப்பட்ட இத்தாக்குதல், மத்தியஸ்தம் கொள்கை மீதான தாக்குதல்,” என்றார். இதற்கிடையே, பயங்கரவாதிகளுக்கு கத்தார் அடைக்கலம் கொடுத்து வருவதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது. இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதல் தொடர்பாகவும், எதிர் காலத்தில் இது போன்ற தாக்குதலை தடுக்க வழிமுறைகளை கண்டறியவும், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்த கத்தார் அழைப்பு விடுத்துள்ளது. கத்தார் மீதான தாக்குதல் குறித்து அவசர விவாதத்தை இன்று நடத்தப் போவதாக ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சில் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Madras Madra
செப் 17, 2025 13:59

அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று இருந்த இஸ்ரேலை தேவையில்லாமல் பொது இசை நிகழ்ச்சியில் நடனம் ஆடி கொண்டிருந்த 1000 பேருக்கும் மேலே கொன்று இந்த அளவுக்கு அவர்களுக்கு கோவம் ஏற்படுத்திய ஹமாஸ் தான் இந்த போருக்கு காரணம்


Srinivasan M
செப் 17, 2025 09:30

சிறந்த comedy


Perumal Pillai
செப் 16, 2025 13:11

சிங்கத்தை சிறு நரிகளால் சீண்ட முடியாது .


JaiRam
செப் 16, 2025 12:10

மூளை இல்லாதவர்களின் பிதற்றல்


Moorthy
செப் 16, 2025 11:27

கத்தார் மற்றும் என்னை வளம் மிக்க நாடுகள் தங்கள் பாதுகாப்பிற்கு அமெரிக்கா ராணுவத்தை வாடகை கொடுத்து தங்கள் நாடுகளில் தளம் அமைத்து கொள்ள அனுமதித்துள்ள இவர்கள் ஒற்றுமை எந்த பலனையும் அளிக்காது


john
செப் 16, 2025 10:41

ஒற்றுமை இவர்களிடம் இல்லை. இந்த உச்சி மாநாடு இதெல்லாம் உலகிற்காக போடும் நாடகம்.


Kannan Chandran
செப் 16, 2025 10:21

ஒன்றாக அமரலாம், பேசலாம், சாப்பிடலாம், அதிகபட்சம் அறிக்கை விடலாம், இவர்களால் போரை கொண்டு செல்லும் அளவிற்கு திறமையோ வலிமையோ கிடையாது, ஒருவேளை மீறினால் வளைகுடா நாடுகளில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களை பாதுகாக்க இயங்காது.. துல்லியமாக தாக்க தெரிந்த இஸ்ரேலுக்கு குத்துமதிப்பா குண்டு போட தெரியாத என்ன?.


Natarajan Ramanathan
செப் 16, 2025 08:49

இஸ்ரேலை அங்கீகரித்து பாலஸ்தீன பயங்கரவாதிகளை அடியோடு அழிப்பதே பிரச்சனை நிரந்தரமாக தீர ஒரே வழி. அதை செய்யாமல் ஒன்றும் முடியாது.


மாபாதகன்
செப் 16, 2025 11:25

உலகோடு ஒத்து வாழ். பாலஸ்தீன நாட்டை இந்தியா அங்கீகரித்துள்ளது. இந்தியா மட்டுமல்ல வெறும் பத்தே பத்து நாடுகளைத்தவிர நூற்று ஐம்பத்துநான்கு நாடுகள் அங்கீகரித்துள்ளது. இஸ்ரேலிய பயங்கரவாதிகளை அடியோடு அழிப்பதே பிரச்சனை நிரந்தரமாக தீர ஒரே வழி. அதை செய்யாமல் ஒன்றும் முடியாது என்பது தங்கள் வாதம் என்றால் நாம் என்ன செய்ய முடியும்.


Kumar Kumzi
செப் 16, 2025 08:34

அதென்ன அரபு இஸ்லாமிய அப்போ அரேபியன் இஸ்லாமியன் இல்லையா


pmsamy
செப் 16, 2025 08:26

விஜய் டிவி காமெடி கிங் குரேஷி மாதிரி இருக்கிறார்


மாபாதகன்
செப் 16, 2025 11:26

நம்ப ஆளு தெலுங்குப்பட வில்லன் மாதிரில்லா இருக்காரு??


ராஜாராம்,நத்தம்
செப் 16, 2025 15:10

யாரு ஸ்டாலின்தான.. நீ என்ன புதுசா கண்டுபிடிச்ச மாதிரி சொல்ற?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை