உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக் வங்கதேசத்தில் நுழைய தடை

முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக் வங்கதேசத்தில் நுழைய தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா : சர்ச்சைக்குரிய முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக், வங்கதேசத்தில் நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் முஸ்லிம் மதபோதகர் ஜாகிர் நாயக். பயங்கரவாதத்தை துாண்டும் விதமாக பேசியதாகவும், நிகழ்ச்சிகளை நடத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.தற்போது, தெற்காசிய நாடான மலேஷியாவில் அவர் தஞ்சம் அடைந்துள்ளார்.இந்த நிலையில், நவம்பர் 28, 29 தேதிகளில் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெறும் மத நிகழ்வில் உரையாற்ற, உள்ளூர் அமைப்பு ஒன்று ஜாகிர் நாயக்கை அழைத்திருந்தது. மேலும், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, அவர் ஒரு மாதம் வங்கதேசத்தில் தங்கவும் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்பட்டது.கடந்த 2016ம் ஆண்டு, டாக்காவில் உள்ள பேக்கரியில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர், நாயக்கின் பிரசங்கங்களால் ஈர்க்கப்பட்டதை அப்போது ஒப்புக்கொண்டிருந்தார். வங்கதேசத்தில், வரும் பிப்ரவரியில் தேர்தல் நடைபெற உள்ளது.ஏற்கனவே, நாட்டில் போராட்டங்கள் வெடித்த நிலையில், சட்டம் -- ஒழுங்கை காரணம் காட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஜாகிர் நாயக் நுழைய வங்கதேச உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. தேர்தல் முடிந்த பின் அவரது வருகை குறித்து மறுபரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

naranam
நவ 06, 2025 08:34

தடையெல்லாம் இவனுக்குப் பத்தாது. இவனை ஒரேயடியாக வேலை தீர்த்து விடுவதே சிறந்த செயல். நம் உளவுத் துறைதான் மனது வைக்க வேண்டும்.


SUBBU,MADURAI
நவ 06, 2025 01:37

ராவோட RAW வா போட்டுத் தள்ளுவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது என்றிருந்த நிலையில் கடைசி நேரத்துல சுதாரிச்சுட்டானுகளே!


Thravisham
நவ 06, 2025 01:05

இது தரித்திர வஸ்து ஏன் இசுரேலில் நுழைய அனுமதி கேட்கக் கூடாது?


Shankar Sarangan
நவ 05, 2025 22:38

தனக்கு வந்தால் ரத்தம். அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னியா.


Ganesun Iyer
நவ 05, 2025 21:22

அப்படியே பாக்கிஸ்தான்லேயும் தடை செஞ்சு, நேர ஆப்கானிஸ்தான்ல பேச அனுமதிக்கலாம்...