உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எனது திட்டமிடப்பட்ட நேரம் முடிவடைகிறது: அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேறினார் எலான் மஸ்க்!

எனது திட்டமிடப்பட்ட நேரம் முடிவடைகிறது: அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து வெளியேறினார் எலான் மஸ்க்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகத்தில் இருந்து வெளியேறுவதாக சமூக வலைதளத்தில் தொழிலதிபர் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருக்கமான நண்பர் எலான் மஸ்க். இவர் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் சமூக வலைதளம் ஆகியவற்றின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை ஆதரித்து இவர் தீவிர பிரசாரம் செய்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5a53macf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார். அமெரிக்க அரசின் செலவுகளை குறைப்பது, நிறுவனங்களை சீரமைப்பது போன்ற பணிகள் ஒப்படைக்கப்பட்டன. மஸ்க் பொறுப்பேற்ற பின் இதுவரை அரசின் செலவுகளில் 10 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தி இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.மஸ்க் இந்த பதவியில் 130 நாள் பணியாற்றுவதற்கு ஒப்புக் கொண்டிருந்தார். அவரின் பதவிக்காலம் இந்த மாத இறுதியில் முடிவடைகிறது.இந்நிலையில் இன்று (மே 29) அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகத்தில் இருந்து வெளியேறுவதாக, எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:சிறப்பு அரசு ஊழியராக எனது திட்டமிடப்பட்ட காலம் முடிவடையும் நிலையில், வீண் செலவுகளைக் குறைப்பதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சண்முகம்
மே 29, 2025 19:47

துரத்தப்படும் முன் ஓடி விட்டார்.


N Srinivasan
மே 29, 2025 13:17

அப்பாடி ஒரு பிரச்சனை தீர்ந்தது


Ramesh Sargam
மே 29, 2025 12:55

இதுபோல காங்கிரஸ் தலைவர் சசி தரூர் அந்த கட்சியிலிருந்து விலகுவாரா?


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 29, 2025 12:26

என்னது ?? கவுண்டமணியை விட்டு செந்தில் பிரிஞ்சுட்டாரா ??


MUTHU
மே 29, 2025 09:00

ஒரு தெனாலி வெளியேறி விட்டார். ஆனால் இன்னொரு தெனாலி வெளியேற இன்னும் மூன்றரை ஆண்டுகள் உள்ளனவே.