உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விண்ணில் 287 நாட்கள் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பினார்

விண்ணில் 287 நாட்கள் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பினார்

கேப் கேனவரல்: விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் ஒன்பது மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ்(59), மற்றும் புட்ச் வில்மோர்(62), இன்று அதிகாலை பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்துள்ள 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. மீட்புப்படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், கடந்தாண்டு ஜூன் 5ம் தேதி, சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும், 'போயிங்' நிறுவனத்தின், முதல் விண்கலமான 'ஸ்டார்லைனர்' வாயிலாக இவர்கள் சென்றனர். அங்கு எட்டு நாட்கள் ஆய்வு பணிகளில் ஈடுபட திட்டமிட்டனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mhx3ebvw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அதன் வாயிலாக அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. போயிங் நிறுவனத்துக்காக விருந்தாளியாக சென்ற அவர்கள், விண்வெளியில் சிக்கியதால் எப்போது பூமிக்கு திரும்புவர் என்ற கேள்வி எழுந்தது. அவர்களுடைய உடல்நிலை தொடர்பான கேள்விகளும் எழுந்தன. ஆனால், இருவரும், விண்வெளி மையத்தில் தங்கியிருந்தபோது, தங்களுடைய பணிகளை மேற்கொண்டனர்.பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அவர்களை பூமிக்கு அழைத்து வர முடியவில்லை. இந்நிலையில், அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின், 'ஸ்பேஸ்எக்ஸ்' விண்வெளி நிறுவனத்தின் வாயிலாக மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, அந்த நிறுவனத்தின் 'பால்கன் -- 9' ராக்கெட் உடன், 'டிராகன்' எனப்படும் வீரர்கள் பயணிக்கும் விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம், விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தை சமீபத்தில் சென்றடைந்தது.இதையடுத்து, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், நேற்று புறப்பட்டனர். அவர்களுடன், கடந்த சில மாதங்களாக அங்கு பணியாற்றிய, அமெரிக்க வீரர் நிக் ஹேக், ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டனர். டிராகன் விண்கலத்தில் சென்ற, நான்கு விண்வெளி வீரர்கள், அவர்களை வழியனுப்பி வைத்தனர்.இந்த விண்கலம், 17 மணி நேர பயணத்துக்குப் பின், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:27 மணிக்கு, அமெரிக்காவின் புளோரிடா அருகே, கடலில் தரையிறங்கியது. கடலில் விழுந்ததும், பந்துபோல் மிதந்து வந்த விண்கலத்தில் இருந்து அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் அவர்கள், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். வீரர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது, நாசா விஞ்ஞானிகளையும், மக்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்தியர்கள் கொண்டாட்டம்:

சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பியதையடுத்து, குஜராத்தில் உள்ள அவரது சொந்த ஊர் மக்கள், பட்டாசு வெடித்தும், டிவியில் அவரது படத்துக்கு ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 19, 2025 16:11

சுனிதாவின் வருகைக்காக உதவிய அனைவர்க்கும் நன்றி - தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் உரை .......


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 19, 2025 16:42

இது மெடல் குத்திக்கிற அசிங்கம் இல்லையான்னு அந்த அடிமைதான் யோசிக்கணும் ....


கத்தரிக்காய் வியாபாரி
மார் 19, 2025 15:31

ஒரு மஞ்சள் பலகையில் கருப்பு எழுத்தில் "பூமி தாய் உங்களை அன்புடன் வரவேற்கிறாள்"


aaruthirumalai
மார் 19, 2025 13:45

மனதுக்கு திருப்தி.


M Ramachandran
மார் 19, 2025 12:52

மிக்க மகிழ்ச்சியான செய்தி.


Kulandaivelu
மார் 19, 2025 12:35

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் எப்பொழுதுமே பிரச்சினை இல்லை நாசா நினைத்து இருந்தால் கடந்த வருடமே ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலமாகவோ அல்லது எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் X விண்கலம் மூலமாகவே அவர்கள் பத்திரமாக திரும்பி இருக்கலாம். காலா தாமதத்திக்கு காரணம் அவர்கள் சென்ற போயிங் ஸ்டார் லிங்க் விண்கலம் திரும்புவதில் பிரச்சினை இருந்தது அதை போயிங் நிறுவனமும் நாசாவும் சரி செய்ய முடியும் என்று நம்பி பல நாட்களாக வேலை செய்தார்கள் ஆனால் இறுதியில் பத்திரமாக திரும்புவதில் நாசாவுக்கு நம்பிக்கை இல்லை அதனால் அவர்கள் எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் X விண்கலத்தின் மூலமாக திரும்ப வரவழைக்கபட்டனர். இது வரைக்கும் ரஷ்யாவின் சோயுஸ் அல்லது ஸ்பேஸ் X மூலமாக 6 மாதத்திற்கு ஒரு முறை பூமியில் இருந்து வின்வெளி வீரர்கள் சென்றும் வந்தும் கொண்டிருக்கிறாரகள். இப்பொழுதும் விண்வெளியில் 6-7 வீரர்கள் இருக்கிறார்கள். கடந்த வருடம் புது முயற்சியாக போயிங் ஸ்டார் லிங்க் விண்கலம் மூலமாக முயற்சித்து இருக்கிறாரகள் அது தோல்வியில் முடிவடைந்தது.


ஆரூர் ரங்
மார் 19, 2025 13:51

போ யிங் பிரச்சினை கமிங் பிரச்சனையாகி விட்டது?


Louis Mohan
மார் 19, 2025 12:05

இறைவனுக்கு நன்றி.


Rajarajan
மார் 19, 2025 11:47

வாழ்த்துக்கள். பூரண நலம் பெற வேண்டுகிறோம்.


M. PALANIAPPAN, KERALA
மார் 19, 2025 10:59

இருவரும் பத்திரமாக பூமி திரும்பியதற்கு மிக்க மகிழ்ச்சி, இறைவனுக்கு நன்றி


Gopi
மார் 19, 2025 10:37

செவ்வாய் கிரகத்திற்கு செல்ல வேண்டுமானால் குறைந்தது பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் குறைந்த பட்ச தூரம் எட்டுவது 26 மாதங்களுக்கு ஒருமுறை ஆறுமாதம் முதல் ஒன்பது மாத பயண தூரம். இதற்காகவே இவர்கள் அங்கு கிடத்தப்பட்டார்களா என்பது பின்னர் வெளிவரும்


Madhavan
மார் 19, 2025 10:34

உலக மக்கள் தங்கள் வேற்றுமைகளை மறந்து ஒன்று பட்ட மனத்துடன் ஒரு சில மணி நேரங்கள் பிரார்த்தனைகளிலும் நல்லெண்ணங்களிலும் ஆழ்ந்து இருந்தார்கள் எனில் அது சுனிதா வில்லியம்ஸ் & அவரது குழுவினர் பாதுகாப்புடனும், ஆரோக்யமாகவும் பூமிக்குத் திரும்பி வர வேண்டும் என விரும்பி எதிர்ப்பார்த்திருந்த தருணங்கள்தான். இப்படி உலக மக்களை வசுதேவ குடும்பகம் ..எனும் கோட்பாட்டுக்கு இட்டு சென்ற சுனிதா வில்லியம்ஸ் & குழுவினருக்கு பாராட்டுதல்களும் நன்றியும். வாழ்க நீவிர்


புதிய வீடியோ