உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விண்வெளி வீரர்களை மீட்க நல்ல ஐடியா சொல்லுங்க; காசு கொடுத்து யோசனை கேட்குது நாசா!

விண்வெளி வீரர்களை மீட்க நல்ல ஐடியா சொல்லுங்க; காசு கொடுத்து யோசனை கேட்குது நாசா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: விண்வெளி வீரர்களை மீட்டு வர, நல்ல யோசனையாக தெரிவிக்கும்படி விஞ்ஞானிகளுக்கு நாசா அழைப்பு விடுத்துள்ளது. சிறப்பான திட்டத்திற்கு 17 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம், நாசா சார்பில் பல்வேறு ஆய்வு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. விண்வெளிக்குச் செல்வது, நிலவுக்குச் செல்வது, விண்வெளி ஆய்வு நிலையம் செல்வது, வேற்று கிரகங்களுக்கு செல்வது போன்ற திட்டங்கள் இவற்றில் அடக்கம். இவ்வாறு வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் போது, பல்வேறு சிக்கல்களை நாசா எதிர்கொள்கிறது. தற்போதும் கூட, விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இருவரை உடனடியாக மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்பதற்கான ஏற்பாடுகளை நாசா செய்திருக்கிறது. எனினும், இதுபோன்ற சிக்கல்கள் எதிர்கால திட்டங்களிலும் ஏற்படலாம் என்று நாசா கருதுகிறது.குறிப்பாக, நிலவில் கரடுமுரடான நிலப்பரப்பில், விண்வெளி வீரர்கள் சிக்கித் தவிக்கும் பட்சத்தில் அவர்களை மீட்பதற்கான, சிறப்பான திட்டங்களை விஞ்ஞானிகளிடமிருந்து நாசா வரவேற்கிறது. இதற்கென சந்திர மீட்பு அமைப்பு என்ற பெயரில் நாசா இணையதளம் ஒன்றை துவக்கி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி வரை தங்களது புதுமை திட்டத்தை சமர்ப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் சிறப்பான திட்டத்திற்கு இந்திய மதிப்பில் 17 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் நாசா அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Surya
டிச 05, 2024 15:33

Sorry நோ idea


Raghavan
டிச 05, 2024 15:20

செல்லூர் ராஜு ஐடியாவை பின் பற்றி ராக்கெட் முழுவதையும் தெர்மோகோல் கொண்டு மூடி ஒரு சேதமும் இல்லாமல் கொண்டுவந்துவிடலாம்.


ஆரூர் ரங்
டிச 05, 2024 14:54

பகுத்தறிவு பகலவன் ஆட்களிடம் கேளுங்க. அவங்ககிட்ட இருக்கும் அறிவு வேற யாரிடமும் இல்லை.


SIVA
டிச 05, 2024 14:02

எங்க திராவிட மாடல் ஆளுங்ககிட்ட சொன்ன பத்து பைசா செலவு செய்யம்மாள் போட்டோ ஷாப் செய்து அவர்களை இங்கு கொண்டு வந்து விடுவார்கள் .... ஆனால் நீங்கள் பதிலுக்கு அவரக்ளுக்கு அங்கேய் சிலை வைக்க வேண்டி இருக்கும் ...


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 05, 2024 13:47

மதிப்பிற்குரிய மாண்புமிகு கமல்ஹாசன் யோசனை சொல்ல முடியும். திமுக ராக்கெட் ஏவுதளம் மூலம் அரசியல் விண்வெளி மையம் சென்று வெற்றிகரமாக மீண்டும் திமுக ஏவுதளத்தை வந்தடைந்தவர். ஆகவே அவர் தான் சரியான ஆள். இன்னொருவர் இப்போது தான் திமுக ஏவுதளத்தில் பயிற்சியில் உள்ளார். இன்னொருவர் அபிமன்யு போல் திமுக விண்வெளி மையம் சென்று விட்டு நாசா போல திரும்ப வருவது தெரியாமல் தத்தளிக்கிறார்.


Anantharaman Srinivasan
டிச 05, 2024 12:38

விண்வெளியிலிருக்கும் வீரர்களின் நிலைமை வீரஅபிமன்யு போலாகிவிட்டது.


லிங்கம், கோவை
டிச 05, 2024 12:27

என்னைய... விண்வெளி கூடத்துக்கு அருகில் கொண்டு செல்லுங்கள்... அங்கு சென்றவுடன் யோசனை செய்து சொல்கிறேன்.


Sivagiri
டிச 05, 2024 12:06

ஆனா எல்லாத்தையும் விட, மிக அருமையான, எளிமையான, வழி இருக்கு - தமிழ்நாட்டு டாஸ்மாக் உள்ள போயிட்டு வந்தா, ஈரேழு பதினான்கு லோகங்களையும் சுத்தி பார்த்துட்டு மட்டை ஆயிடலாம் . .


Sivagiri
டிச 05, 2024 12:04

ரஷ்யாகிட்டே கேட்டா விடை தெரியும், விண்வெளி ராக்கெட்டுகளில் உலகிலேயே ரஷ்யாக்காரன்தான் கில்லாடிகள்... அதை விட இஸ்ரோ-க்கு, லம்ப் அமௌண்ட்டை தள்ளினா எல்லாம் சுபம்தான் . . .


Ramona
டிச 05, 2024 11:36

எதற்கு இந்த கவலை, எவ்வளவோ பேர்களை,மழைக்காலத்தில் காப்பாற்றும் திறமை எங்களுக்கு உண்டு, எங்கள் வசம் உள்ள பஸ்களில் அவர்களுக்கு எந்த சேதாரமும் இல்லம அழைத்த வர முடியாத என்ன?


வீரபத்திரன்,கருங்காலக்குடி
டிச 05, 2024 11:56

இப்போது விண்வெளி வீரர்களை மீட்க மக்களிடம் ஆலோசனைகளை கேட்கும் அமெரிக்கா 1969 ம் வருஷம் அமெரிக்காவின் நாசா, கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 5 SA 506 என்ற ராக்கெட் மூலம் நீல்.ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகிய மூணு பேரையும் நிலாவுக்கு அனுப்பி அவர்களை அங்கு இறங்கி நடக்கச் செய்து விட்டு திரும்பவும் பூமிக்கு அழைத்து வந்தது எப்படி?