வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உண்மையாக கூறினால் எல்லோருக்கும் கோவம் வரும், இவருக்கு எந்த ஒர பிரச்சனையும் இல்லை, இவர் நம்மை விட மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி வல்லுனர்களும் அமெரிக்காவிற்கு உதவி புரியவேண்டும்.
புளோரிடா: விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்பதற்கான விண்கலம் இன்று இரவு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது.அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சுனிதா வில்லியம்ஸ், 58, புட்ச் வில்மோர், 61, ஆகியோர் கடந்த ஜூன் 5ல் சர்வதேச விண்வெளி மையம் சென்றனர். ஜூன் 7ல் பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ., உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றடைந்தனர்.அங்கிருந்து ஆய்வு நடத்திவிட்டு பூமிக்கு திரும்பும் நிலையில் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்துவிசை கருவியில் ஏற்பட்ட கோளாறால் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 8 நாள் பயணம் 8 மாதமாக நீட்டிக்கப்பட்டது.தற்போது 110 நாட்களுக்கு மேலாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளி மையத்தில் தவித்து வருகின்றனர். அவர்களை அழைத்து வர நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாடியது. அந்நிறுவனத்தின் டிராகன் கேப்சூல் எனப்படும் விண்கலன் உதவியுடன் அவர்களை அழைத்து வர உள்ளனர். 4 வீரர்கள் குழுவுடன் விண்வெளிக்கு செல்லும் இந்த டிராகன் விண்கலன் அடுத்தாண்டு பிப்ரவரியில் தான் பூமிக்கு திரும்பும் என தகவல் வெளியானது.இந்த நிலையில், நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்பதற்கான க்ரூ-9 செல்லும் விண்கலம் இன்று இரவு 10.47 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது. புளோரிடாவின் விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று (செப்.,28) விண்கலம் புறப்பட்டது.
உண்மையாக கூறினால் எல்லோருக்கும் கோவம் வரும், இவருக்கு எந்த ஒர பிரச்சனையும் இல்லை, இவர் நம்மை விட மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி வல்லுனர்களும் அமெரிக்காவிற்கு உதவி புரியவேண்டும்.