உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் உத்தரவு எதிரொலி: நாசாவில் இந்திய வம்சாவளி பெண் அதிகாரி பணி நீக்கம்

டிரம்ப் உத்தரவு எதிரொலி: நாசாவில் இந்திய வம்சாவளி பெண் அதிகாரி பணி நீக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: நாசாவில் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் அதிகாரி நீலா ராஜேந்திரா பணி நீக்கம் செய்யப்பட்டார்.அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அரசில் தேவையற்ற செலவுகளை குறைக்கவும், நிர்வாகத்தை சீர்படுத்தவும் எலான் மஸ்க் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இக்குழு அளித்த பரிந்துரைப்படி பல துறைகள் மூடப்பட்டன. பல அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பல்வேறு துறைகள் பணிகளை நிறுத்தும்படி அறிவுறுத்தப்பட்டன.இந்த உத்தரவு காரணமாக, நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்துறை(டிஇஐ) நீலா ராஜேந்திராவின் பதவி பறிபோனது. இந்த துறையை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து நீலா ராஜேந்திராவின் பதவியை காப்பாற்ற, அவர் வகித்த பதவி ' Head of Office of Team Excellence and Employee Success' என மாற்றப்பட்டது. ஆனாலும், இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனை டிரம்ப் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனையடுத்து நீலா ராஜேந்திரா பணி நீக்கம் செய்யப்பட்டதாக, தனது ஊழியர்களுக்கு இமெயில் மூலம் நாசா தெரியப்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 15, 2025 21:55

DEI - Diversity, Equality, Inclusivity என்பது நம்ம ஊரு சமூகநீதி போன்ற பில்டப். டிரம்ப் ஒரே போடாய் போட்டுவிட்டார். இனி திறமைக்கு மட்டும்தான் மரியாதை, DEI கொண்டு போய் குப்பையில் போடுங்கள் என்று சொல்லிவிட்டார். வெட்டி ராஜா, ராணிகள் எல்லோருக்கும் கல்தா.


ganesh ganesh
ஏப் 15, 2025 21:27

அமெரிக்கா சென்றால் ஒரு திமிர். அது தான் காரணம் .


M S RAGHUNATHAN
ஏப் 15, 2025 21:18

This post is a non technical post. The department also does not add value to the NASA research team. Trump is a corporate bigwig. He is set to follow corporate maxims that " thinner the team, better the results ". He banks on meritocracy and talent.


Ramesh Sargam
ஏப் 15, 2025 20:31

நீ புடுங்கற ஆணி எல்லாம் தேவையில்லாத ஆணிதான் என்று ஒரு வசனம் வடிவேலு படத்தில் வரும். அதுபோல டிரம்ப் களையெடுக்கிற ஆட்கள் எல்லாம் தேவை இல்லாத ஆட்கள்தான் போல.


sankaranarayanan
ஏப் 15, 2025 19:14

நாசா நாசமானால் டிரம்புக்கு என்ன ஆச்சு நான்கு ஆண்டு ஆட்சியில் இருப்பதே சந்தேகம் மக்களின் எதிர்ப்பை அதிகமாக சம்பாத்தித்த ஒரே ஒரு ஜனாதிபதி என்ற பெயரை வாங்கிகொண்டுவிட்டார் பாமர மக்களின் வயிற்றிரைச்சலை அதிகமாகவே பெற்றுகொண்டிவிட்டார் இனி என்ன வேண்டும் வாழ்க்கையில் இவருக்கு இனி நிம்மதி என்பதே கிடையாது


Srinivasan Krishnamoorthy
ஏப் 15, 2025 22:40

Possibly you dont understand DEI, which was useless department and expenses. Trump and elon musk rightly identified such unnecessary spending of tax payers money. She is not a scientist. just enjoyed useless job


தாமரை மலர்கிறது
ஏப் 15, 2025 19:06

இவர் ஒன்றும் விஞ்ஞானி அல்ல. இவர் வகித்த பதவி வெறும் தேவை இல்லாத ஆணி. புடுங்கி எறியப்படவேண்டிய ஆணி. ட்ரம்ப் சரியாக களையெடுத்துள்ளார்


Jagan (not a Sangi anymore)
ஏப் 15, 2025 18:14

DEI என்பது சமூக நீதி பாலிடிக்ஸ். திறமைக்கு முன்னுரிமை குடுக்க வேண்டும் இது போன்ற சமூக நீதி கொண்டுவரும் பதவிகளை நீக்க வேண்டும். ட்ரம்ப் செஞ்சது சரி சரி மிக மிக சரி.


Jagan (not a Sangi anymore)
ஏப் 15, 2025 18:06

இந்த வேலை தேவையில்லாதது. இது போன்ற இடது சாரிகள் உள்ளே புகுந்தால் எதுவும் உருப்படாது. வீட்டுக்கு அனுப்பியது நாசாவுக்கு நல்லதே.


Srinivasan Krishnamoorthy
ஏப் 15, 2025 17:57

DEI was a wasteful expense and it is to be appreciated for closing the department, some indian companies who were supporting DEI also closed their shops


Balaji
ஏப் 15, 2025 17:47

ஒரு தேவையில்லாத ஆனி பிடுங்கப்பட்டது.. இந்திய வம்சாவளிக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.. வோக் ஜெனெரேஷனின் அங்கம் இந்தமாதிரியான அதிகாரங்கள்.. தேவையற்ற பதவிகள்..


Iniyan
ஏப் 15, 2025 17:54

சரியாக சொன்னீங்க


சமீபத்திய செய்தி