உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 16 வயதுள்ளோர் ஓட்டளிக்கலாம் நேபாளம் அறிவிப்பு

16 வயதுள்ளோர் ஓட்டளிக்கலாம் நேபாளம் அறிவிப்பு

காத்மாண்டு:நேபாளத்தின் இடைக்கால பிரதமர் சுசீலா கார்கி, அந்நாட்டில் தேர்தலில் ஓட்டளிக்கும் வயதை 18லிருந்து 16 ஆக அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நம் அண்டை நாடான நேபாளத்தில் நடந்த இளைஞர்களின் ஊழலுக்கு எதிரான போராட்டம் காரணமாக, அங்கு பெரும் கலவரம் வெடித்தது. இ தை தொடர்ந்து, பிரதமராக இருந்த சர்மா ஒலி பதவி விலகினார். உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுசீலா கார்கி தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. சுசீலா கார்கி முதல் முறையாக, 'டிவி' வாயிலாக நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றினார். அப்போது, நேபாளத்தில் தேர்தலில் ஓட்டளிக்கும் குறைந்தபட்ச வயது வரம்பை 18ல் இருந்து 16 ஆக குறைப்பதாக அறிவித்தார். அடுத்த ஆண்டு மார்ச்சில் நடைபெறும் பார்லிமென்ட் தேர்தலில், இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ