உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களை தடை செய்தது நேபாளம்!

பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களை தடை செய்தது நேபாளம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காத்மாண்டு: நேபாளத்தில் 26 சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு அரசுதடை விதித்து உத்தரவிட்டது. இதன்படி பேஸ்புக், இன்ஸ்டா மற்றும் எக்ஸ் (டுவிட்டர்) தளங்களுக்கு இன்று முதல் தடை அமலுக்கு வந்தது. நேபாளத்தில் உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, பேஸ்புக், எக்ஸ் (டுவிட்டர்), இன்ஸ்டா மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக வலைதளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதனை, நேபாள தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் உறுதிப்படுத்தினார். நேபாளத்தில் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்து, உள்ளூர் தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென பலமுறை சமூக வலைதளங்களுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கு சமூக வலைதள நிறுவனங்கள் எந்த பதிலும் அளிக்காத நிலையில் இன்று 26 சமூக வலைதளங்களுக்கு தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.டிக்டாக் மற்றும் வைபர் உள்ளிட்ட 5 சமூக வலைத்தளங்கள், அரசின் விதிமுறைகளைப் பின்பற்றிப் பதிவு செய்துள்ளதால், அவை தொடர்ந்து நேபாளத்தில் செயல்படும். இரண்டு வாரங்களுக்கு முன்பு, நேபாளத்தின் உச்ச நீதிமன்றம் அனைத்து ஆன்லைன் மற்றும் சமூக ஊடக தளங்களும் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அதிகாரியிடம் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குகிறது.

கிளம்பியது விமர்சனங்கள்!

26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது விமர்சனங்களை கிளப்பியுள்ளது. எதிரிகளை மவுனமாக்கவும், கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தவும் நோக்கம் கொண்டது என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

KRISHNAN R
செப் 05, 2025 11:15

நல்ல விஷயம். பின்னணி.? இந்தியா முன் எடுத்தா நல்லது


Natarajan Ramanathan
செப் 04, 2025 23:46

இந்தியாவிலும் இன்ஸ்டாக்ராம் மற்றும் முகநூலை தடை செய்தால் மிகவும் நல்லது.


ManiMurugan Murugan
செப் 04, 2025 23:20

அருமை பாராட்டுகிறேன் இந்தியாவிலும் தடை செய்யப்பட வேண்டும் நடைப்பிணமாக இருக்கும் மக்கள் உயிர்பெறுவார்கள்


xyzabc
செப் 04, 2025 22:47

நேபாளம் முன்னேற்ற பாதையில் செல்கிறது. மக்கள் நேரம் வேஸ்ட் ஆகாது.


தத்வமசி
செப் 04, 2025 22:21

சின்ன நாடுங்க... அமெரிக்கா மற்றும் சீன நிறுவனங்களுக்கு எதிராக என்ன செய்து விட முடியும் ?


muthu
செப் 04, 2025 20:53

இந்தியாவுக்கு இந்த உத்தரவு நடைமுறைக்கு வருமா


Manaimaran
செப் 04, 2025 20:51

தமிழகத்துக்கும் சில கட்டுபாடுகள் தேவை.தடி எடுத்தவன் எல்லாம்...


சமீபத்திய செய்தி