உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் போர் முடிவடையாது: சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்

காசாவில் போர் முடிவடையாது: சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: ஹமாஸ் அமைப்பு ஆயுதமற்றதாக மாற்றப்படும் வரை காசாவில் போர் முடிவடையாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.காசாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன் மொழிந்த அமைதி திட்டத்தின் படி தற்போது அங்கு போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இருப்பினும், ஹமாஸ் மற்றும் அவர்களை எதிர்க்கும் சில குழுக்கள் இடையே மோதல் எழுந்து வருகிறது. காசா மக்களை கொல்வதை நிறுத்த வேண்டும், இல்லாவிட்டால் உள்ளே சென்று ஹமாஸ் அமைப்பினரை கொல்வதை தவிர வேறு வழி இல்லை என்று டிரம்பும் அண்மையில் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டு இருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=se8qthnk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாலஸ்தீன மக்களை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுபோன்ற தாக்குதல்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்த ஒப்பந்தத்தை கடுமையாக மீறுவதாகும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருந்தது.இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: ஹமாஸ் அமைப்பு ஆயுதமற்றதாக மாற்றப்படும் வரை காசாவில் போர் முடிவடையாது. இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் ஹமாஸ் அமைப்பிடம் இருந்து ஆயுதங்களை பறிப்பதே நோக்கமாக கொண்டுள்ளோம்.இது வெற்றிகரமாக முடிந்ததும் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும். இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் இதுவரை உயிருடன் உள்ள பிணைக்கை திகள் 20 பேரை விடுவித்துள்ளது. இஸ்ரேல் 135 பாலஸ்தீனியர்களின் உடல்கள் மற்றும் 2,000 பாலஸ்தீன கைதிகளை விடுவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
அக் 20, 2025 08:27

ஐயய்யோ... போர் முடிஞ்சிட்டா நேதன் யாஹுவின் எதிர்காலம் என்னாவறது? அமெரிக்காவின் ராணுவதளவாட விற்பனை என்னாவறது? நாளைக்கி இந்தியாவும் தளவாட ஏற்றுமதியில் மின்னப்போகிறது. போர் நடந்துக்கிட்டே இருக்கணும். இருக்கும்.


RK
அக் 19, 2025 22:08

காசா இஸ்ரேல் வசமாகும். பிணைக்கைதிகளை கொடுத்து முடித்த பின். தீவிரவாதிகளை ஒழிக்கும் இஸ்ரயேலுக்கு வாழ்த்துக்கள்.


Sridhar
அக் 19, 2025 19:51

மிகவும் சரி. ஹமாஸ் முற்றிலும் அழிக்கப்பட்டாலொழிய பாலஸ்தீனிய பிரச்சனை தீர்வதற்கு வாய்ப்பே இல்லை.


Rathna
அக் 19, 2025 19:27

ஹமாஸ் தீவிரவாத இயக்கம் இருக்கும் வரை முடிய வாய்ப்பில்லை. காசாவில் இரண்டு நாளைக்கு முன் தனது இனத்தை சேர்ந்த அப்பாவிகளை ஹமாஸ் கொடூர கொலை செய்து உள்ளார்கள்.


sankaranarayanan
அக் 19, 2025 16:55

ஹமாஸ் அமைப்பு ஆயுதமற்றதாக மாற்றப்படும் வரை காசாவில் போர் முடிவடையாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். போ அமெரிக்க அதிபரின் அமைதிக்கான நோபல் பரிசு என்ன ஆகும் யாருக்கு கொடுப்பார்கள்


Senthoora
அக் 19, 2025 16:44

இந்த நெதன்யாவும், இலங்கை ராஜபக்சே கூட்டமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்


R. SUKUMAR CHEZHIAN
அக் 19, 2025 14:43

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து வரவேற்கதக்கது, இஸ்ரேல் அமாஸ் மற்றும் காட்டுமிராண்டி ஜிகாதி கும்பல்களை முற்றிலுமாக ஒழித்து கட்டி காசாவை இஸ்ரேலுடன் மீண்டும் இணைக்க வேண்டும்.


சுந்தர்
அக் 19, 2025 14:12

ட்ரம்ப்பர் கையெழுத்து போட்டுட்டாரே... இப்ப இப்படி சொல்றீங்க?


சமீபத்திய செய்தி