உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீன அதிபரின் உதவியாளர்களை போல மிமிக்ரி செய்த டிரம்ப்!

சீன அதிபரின் உதவியாளர்களை போல மிமிக்ரி செய்த டிரம்ப்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் செனட்டர்கள், அமைச்சர்கள், உதவியாளர்கள் முன்னிலையில், சீன அதிபரின் உதவியாளர்களை போலவே நடந்தும், மிமிக்ரி செய்தும் அதிபர் டிரம்ப் வேடிக்கை காட்டினார்.அமெரிக்க அதிபர் டிரம்ப், சமீபத்தில் சீன அதிபரை சந்தித்து வர்த்தகம் தொடர்பான பேச்சு நடத்தினார். சீன அதிபருடன் தனது சந்திப்பு குறித்து டிரம்ப் வெள்ளை மாளிகையில், செனட்டர்கள், உதவியாளர்கள், அமைச்சர்கள் முன்னிலையில் கிண்டலாக பேசினார். அவர் கூறியதாவது: சீன அதிபருக்கு பின்னால் இரண்டு புறமும் தலா 6 பேர் என அவரது உதவியாளர்கள் நின்று கொண்டிருந்தனர். மிகுந்த விறைப்பாக என்னை பார்த்தப்படியே நின்று கொண்டிருந்தனர்.'நீங்களா எனக்கு பதில் சொல்ல போகிறீர்கள்' என்று நான் அவர்களிடம் கேட்டேன். ஆனால் அதற்கு பதில் சொல்லவில்லை. அவர்கள் பதில் சொல்லவும், சீன அதிபர் ஜி ஜின்பிங் அனுமதிக்கவில்லை. இவ்வாறு டிரம்ப் கூறினார்.இதையடுத்து துணை அதிபர் வான்ஸ் பக்கம் திரும்பிய டிரம்ப், 'நீங்களும் ஏன் சீன அதிபரின் உதவியாளர்கள் போல் நடந்து கொள்ள கூடாது' என்று கேட்டார். பின்னர் அவர், 'வான்ஸ் அப்படி நடந்து கொள்வது இல்லை. எங்களது உரையாடல்களுக்குள் புகுந்து கொள்கிறார். நீங்களும் ஒரு சில நாட்களாவது அவர்களை போல் நடந்து கொள்ள வேண்டும், சரியா' என்று கேட்டார். அவரது வேடிக்கையான பேச்சு அந்த அறையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. சீன அதிபர் பற்றி குறிப்பிட்ட டிரம்ப், ''அவர் ஒரு கடினமான மனிதர். மிகவும் சிறப்பானவர். ஆனால் அவரது உதவியாளர்கள் மிகவும் பயந்து இருந்தனர். என் வாழ்க்கையில் இப்படி பயந்து போயிருந்த ஆண்களை நான் கண்டதே இல்லை,'' என்றார். சீன அதிபரின் உதவியாளர்கள் போலவே நடந்து, சைகை காட்டிய டிரம்ப், அவர்களை போலவே மிமிக்ரி செய்தும் வேடிக்கை காட்டி அனைவரையும் சிரிக்க வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தாமரை மலர்கிறது
நவ 06, 2025 20:29

டிரம்புக்கு எப்பவுமே சீன அதிபரை போன்று சர்வாதிகாரியாக ஆசை உண்டு. அதை வெளிப்படையாக சொல்லியுள்ளார்.


N S
நவ 06, 2025 18:05

அன்று மோடி போல பேசி காட்டினார். இன்று சீன அதிபரின் உதவியாளர்கள் போல. ஒரு நாட்டின் அதிபரின் மாண்பு?


N Srinivasan
நவ 06, 2025 17:12

For a so called great country America, it is not good to have such a ridiculous President ,,


Field Marshal
நவ 06, 2025 15:06

உக்ரேனுக்கு ஒருத்தர் ..இந்தியாவுக்கு ஒருத்தர் ..அமெரிக்காவுக்கு ஒருத்தர் ...


RAMESH KUMAR R V
நவ 06, 2025 12:24

உலக காமெடி நாயகன். வாழ்க நடிப்பு.


S. Gopalakrishnan
நவ 06, 2025 12:03

பித்தம் தலைக்கேறி விட்டது !


duruvasar
நவ 06, 2025 11:46

அமெரிக்க உலகநாயகன்.


murthy c k
நவ 06, 2025 12:33

அமெரிக்க உளறல் நாயகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை