உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / புதிய ஆன்மிக தலைவராக ரஹீம் அல் ஹூசைனி பொறுப்பேற்பு

புதிய ஆன்மிக தலைவராக ரஹீம் அல் ஹூசைனி பொறுப்பேற்பு

லிஸ்பன்: தனது தந்தையின் மரணத்தை தொடர்ந்து, ஷியா இஸ்மாயிலி முஸ்லிம்களின் புதிய ஆன்மிக தலைவராக ரஹீம் அல் ஹூசைனி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.ஷியா இஸ்மாயிலி முஸ்லிம்களின் 49வது பரம்பரை இமாம் ஆக நான்காவது ஆகா கான் கரீம் அல் ஹூசைனி இருந்தார். 88 வயதான அவர், வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். இவருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தந்தையின் மரணத்தை தொடர்ந்து, ஷியா இஸ்மாயிலி முஸ்லிம்களின் புதிய ஆன்மிக தலைவராக நான்காகவது ஆகா கானின் மூத்த மகன் ரஹீம் அல் ஹூசைனி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.53 வயதான ரஹீம் அல் ஹூசைனி, ஐந்தாவது ஆகா கான் என்ற பட்டத்துடன், 50வது பரம்பரை இமாம் ஆக பொறுப்பேற்றார். இவர் அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். தற்போது இஸ்மாயிலி முஸ்லிம்களின் புதிய ஆன்மிக தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Tetra
பிப் 08, 2025 12:36

இந்த செய்தி நமக்கு தேவையா? அவன் நாட்டில் அவன் ஏதோ செய்கிறான். நமக்கென்ன?


என்றும் இந்தியன்
பிப் 06, 2025 17:09

1-ஆன்மிகம் - முஸ்லீம்??? தீவிரவாதம் - முஸ்லீம் சரியானது ஆன்மிகம் அல்லவே அல்ல 2.- அப்பன் ஆன்மீக??? தலைவர் அப்போ வாரிசு தான் தலைவர் - இது திமுக வழி


Haja Kuthubdeen
பிப் 06, 2025 18:26

முதலில் உம் வீட்டில் உள்ள ஓட்ட உடசலை சரி செய்துட்டு அடுத்த வீட்டை எட்டி பார்க்கலாமே


நிக்கோல்தாம்சன்
பிப் 06, 2025 15:46

இவர் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு மாத்திரம் தலைவரா , இல்லை SUன்னி பிரிவுக்கும் தலைவரா ? இதுநாள் வரை இப்படி ஒரு பதவி இருப்பதே தெரியாது


Haja Kuthubdeen
பிப் 06, 2025 19:05

உலகின் பெரும்பாலான முஸ்லிம்கள் சன்னி பிரிவை சேர்ந்தவர்களே...ஷியா பிரிவு முஹம்மது நபிக்கு பிறகு தோன்றியது.ஷியா பிரிவில் இஸ்மாயிலி.. அஹமதியா..போரா என்ற உட் பிரிவு உண்டு...அவர்களின் தலைவரது சொல்லே வேதவாக்கு..எதிர்ப்பவர்களை அந்த பிரிவில் இருந்து நீக்கம் செய்து விடுவார்கள். இஸ்லாத்திற்கு முற்றிலும் வேறுபட்ட பழக்கம் வழக்க முறை இருக்கும்.தொழுகை அழைப்பும் புதுமாதிரியா இருக்கும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
பிப் 07, 2025 06:59

சீக்கியம் மற்றும் இஸ்லாம் முந்தாநாள் தோன்றியவை. அவற்றிற்கு முன் பல நூறு அல்லது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவை கிறிஸ்தவம், பௌத்தம், பார்சியம், ஜூடாயிசம், சனாதனம் போன்றவை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை