உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வினாடிக்கு 600 கோடி டன் பொருட்களை விழுங்கி பிரமாண்டமாக வளர்கிறது புதிய கோள்

வினாடிக்கு 600 கோடி டன் பொருட்களை விழுங்கி பிரமாண்டமாக வளர்கிறது புதிய கோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்:ஒவ்வொரு வினாடியும், 600 கோடி டன் பொருட்களை விழுங்கி, மிக பிரமாண்டமாக வளர்ந்து வரும் அதிசய இளம் கோளை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.ஆய்வு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா மற்றும் உலகின் மற்ற விண்வெளி ஆய்வாளர்கள், வளிமண்டலத்தில் உள்ளவற்றை தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர்.அந்த வகையில், 2008ல் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இளம் கோளுக்கு 'சா 1107 - 7626' என்று பெயர் சூட்டப்பட்டது. சாதாரணமாக ஒரு கோள், ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும். உதாரணத்துக்கு நம் பூமியானது, சூரியன் என்ற நட்சத்திரத்தை சுற்றி வருகிறது .ஆனால், இந்த புதிய கோளானது எந்த ஒரு நட்சத்திரத்தையும் சுற்றாமல் தனித்து உள்ளது.மேலும், இது வளி மண்டலத்தில் துாசு மற்றும் பிற பொருட்களின் மோதல்கள் அல்லது இணைவதன் வாயிலாக உருவாகவில்லை.இந்நிலையில், கடந்த சில மாதங்களில், இந்த இளம் கோள், அகோர பசியுடன், கண்டமேனிக்கு கிடைத்ததை எல்லாம் விழுங்கி வருகிறது.இவ்வாறு அகோர பசியுடன் ஒரு கோள் இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இக்கோள் ஒவ்வொரு வினாடியும், தன் சுற்றுவட்ட பாதையில் உள்ள 600 கோடி டன் துாசி மற்றும் வாயு பொருட்களை தன்னுள் ஈர்த்து விழுங்கி வருகிறது.மைல்கல் இந்த அளவு மற்றும் வேகம், இதுவரை பார்த்திராத ஒன்று என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.பொதுவாக, நட்சத்திரங்களை சுற்றும் கோள்கள் மட்டுமே இவ்வாறு பொருட்களை சேர்த்து வளர்ச்சியடையும் என கருதப்பட்டது.ஆனால், விண்வெளியில் தனியாக உள்ள ஒரு கோள் இவ்வளவு வேகமாக வளர்வதை பார்ப்பது என்பது பொதுவான புரிதலை மாற்றியமைப்பதாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.'சா 1107 - 7626 ' கோளின் தீவிர வளர்ச்சி, நட்சத்திரங்கள் உருவாகும்போது நடப் பது போலவே அதன் காந்தபுலத்தால் துாண்டப்படுகிறது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இக்கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய மைல்கல் லாக பார்க்கப்படுகிறது.மேலும், இது பற்றி கூடுதல் தகவல்களை பெற, விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

sumangali bags
அக் 05, 2025 02:01

அவளோ குப்பை எப்படி வின்வேளியில் வந்தது?


Kulandai kannan
அக் 04, 2025 15:19

அந்தக் கோளிற்கு கட்டுமரம் என்று பெயர் சூட்டலாம்.


Tetra
அக் 04, 2025 20:20

ஆஹா நேர்த்தியான கண்டுபிடிப்பு.


சிந்தனை
அக் 04, 2025 14:48

அடுத்தடுத்த கண்டுபிடிப்புகள் வந்தபிறகு பழைய கண்டுபிடிப்புகள் பொய் என்று தெரிகிறது. ஆனால் அதுவரை அது உண்மை என்று நாம் நம்பிக்கொண்டே படிக்க வேண்டும்...


Manyan
அக் 04, 2025 13:49

இதற்கான அடிப்படை அணு கொள்கை. புரோட்டான் மற்றும் எலெக்ட்ரான்களுக்கு இடையே ஆன ஈர்ப்பு. பிரபஞ்சங்களை ஒப்பிடும் போது நம் பூமியானது ஒரு அணுவில் உள்ள எண்ணற்ற எலெக்ட்ரான்களில் ஒன்று போன்றது.


Mahendran Puru
அக் 04, 2025 13:15

விஞ்ஞான கண்டுபிடிப்பு. அதைப் பற்றிய புரிதல் இல்லாமல் குதர்க்கவாதம்தான் இங்கே கமெண்ட்டுகளானது.


நிக்கோல்தாம்சன்
அக் 04, 2025 11:53

Cha_1107−7626 என்று படியுங்க நண்பர்களே


srinivasan Dhamodaran
அக் 04, 2025 11:39

இதற்கு சீனா என்று பெயரே சிறந்ததாகும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 04, 2025 11:32

இது என்ன அதிசயம் வினாடிக்கு வினாடி கனிம வளங்கள் சாராயம் குடித்து பிரம்மாண்டமாக வளர்ந்து வருகிறது ஒரு கட்சி தமிழகத்தில்.


V Venkatachalam
அக் 04, 2025 11:07

ஓரே ஒரு சொல். அகோர பசி.‌ இந்த ஒரு சொல்லை கேட்டவுடன் தினமலர் வாசக நண்பர்கள் ஒவ்வொருவர் மனதிலும் திராவிட மூடல் அரசுதான் நினைவுக்கு வந்திருக்கிறது. இது பிரம்மாண்டமான வளர்ச்சி இல்லையா? இந்த கொள்ளையர்களின் வளர்ச்சிக்கு முன் நீதி நேர்மை நாணயம் நன்னடத்தை எல்லாம் துரும்பாகிவிட்டது என்பதையே வாசக நண்பர்களின் பதிவுகள் பறை சாற்றுகின்றன. இந்த பிரம்மாண்ட அசுரர்களை எப்படி அழிக்க போகிறோம்? தலை சுற்றி மயக்கம் வருகிறது.


அஜய் இந்தியன் தெற்கு தமிழகம்
அக் 04, 2025 10:01

இந்த செயல்வையும் அரசியலையும் ஒப்பிட்டு பார்க்கும் எண்ணம் தான் முதலில் வருகிறது. இது அரசியலில் மிக மிக வேகமாக மக்களின் ஆதரவை பெற்று வளர்ந்து வரும் அண்ணாமலை, விஜய் போன்று என்று சொல்ல தோன்றுகிறது. ஆனால் இங்கு அண்ணாமலை தான் திறமை வாய்ந்த மனிதன். காரணம் அண்ணாமலை இவர் நேர்மை, நடந்து கொள்ளும் செயல்களைக் செய்து வளர்ச்சி அடைகிறார். விஜய் இந்தனை ஆண்டுகள் நடிகன் ஆகா இருந்த காரணத்தினால் மக்களிடம் பிரபலம் அடைந்ததை வைத்து அரசியலில் எளிதில் மக்களிடம் ஆதரவை பெறுகிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை