உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அடுத்தது அணு ஆயுதம் தான்: புடின் எச்சரிக்கை

அடுத்தது அணு ஆயுதம் தான்: புடின் எச்சரிக்கை

மாஸ்கோ, 'பிரிட்டன் வழங்கியுள்ள ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம்' என, மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டரை ஆண்டுகளை கடந்துள்ளது. உக்ரைனுக்கு, மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதன்படி, 'ஸ்டார்ம் ஷேடோ' என்ற அதிநவீன ஏவுகணைகளை பிரிட்டன்வழங்கியுள்ளது. உள்நாட்டில் எதிரி படைகளுக்கு எதிராக இந்த ஏவுகணையை பயன்படுத்த, உக்ரைனுக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்திருந்தது.ரஷ்யாவுக்குள் செலுத்தி தாக்குதல் நடத்துவதற்கு பிரிட்டன் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டாமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பின்போது, இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.ஒருவேளை உக்ரைன் இந்த ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, ரஷ்யாவின் ராணுவ தளபதிகளுடன் அந்நாட்டு அதிபர் விளாடிமிர்புடின் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, ரஷ்ய அணு ஆயுத பயன்பாட்டு கொள்கையில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ''அணுஆயுதம்இல்லாத எந்த நாடும், அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகளுடன் இணைந்து ரஷ்யா மீது தாக்குதல் நடத்துவது, நேரடி போராகவே கருதப்படும். ''எனவே, ரஷ்யா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டால், அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம்,'' என, உக்ரைன் மட்டுமின்றி அந்நாட்டுக்கு உதவும் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு, புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

5 மணி நேர தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது, நேற்று முன்தினம் நள்ளிரவு துவங்கி, நேற்று அதிகாலை வரை தொடர்ந்து ஐந்து மணி நேரம் ரஷ்யப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. ஆறு ஏவுகணைகள் மற்றும் 78 ட்ரோன்கள் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதில், ஆரம்பப்பள்ளி ஒன்று, எரிவாயு குழாய்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட கார்கள் சேதம் அடைந்துள்ளன; இருவர் பலியாகி உள்ளனர்.

ரஷ்ய அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

ஐ.நா., பொதுசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அமெரிக்காவின் நியூயார்க் சென்றுள்ள நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரோவை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, இரு தரப்பு உறவு, பிராந்திய விஷயங்கள், உக்ரைனுடனான போர் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு சமீபத்தில் சென்ற பிரதமர் மோடி, போரை நிறுத்துவது தொடர்பாக, அந்த நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். இதன் தொடர்ச்சியாக தற்போது, ரஷ்ய அமைச்சருடன், ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ