உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழையும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழையும்: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: வரும் நாட்களில் ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழைகிறது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஜனவரியில், 42 நாட்களுக்கான முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அது முடிந்த பின், போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பல்வேறு நிபந்தனைகள் விதித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=44fhmu7h&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குறிப்பாக பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், ஹமாஸ் படையினரை அழிக்க, வரும் நாட்களில் ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழைகிறது என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது குறித்து பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: போரை நிறுத்தும் சூழ்நிலை இருக்காது. ஒரு தற்காலிக போர் நிறுத்தம் நடக்கலாம். ஆனால் நாங்கள் முழு முயற்சியுடன் செயல்படுகிறோம். வரும் நாட்களில் ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழைகிறது. வரவிருக்கும் நாட்களில், நாங்கள் முழு பலத்துடன் இந்த நடவடிக்கையை முடிக்கப் போகிறோம். இந்த நடவடிக்கையை முடிப்பது என்பது ஹமாஸை தோற்கடிப்பதாகும். அதாவது ஹமாஸை அழிப்பதாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். போர் நடந்து வருவதற்கு எதிராக, சர்வதேச கண்டனங்கள் இருந்தபோதிலும், இஸ்ரேல் தனது தாக்குதலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

R. SUKUMAR CHEZHIAN
மே 14, 2025 11:25

Go ahead always Bharath stand with Israel.


muralidaran ms
மே 14, 2025 09:26

தி க வை காசா மற்றும் இஸ்ரேல் க் கு அனுப்பி கலப்பு திருமணம் செய்து மக்களை ஒருங்கிணைக்க வேண்டும்


Karthik
மே 14, 2025 10:36

தி க காசாவுக்குள் குடியேறினாலே போதும்.. மற்ற அனைத்தும் செவ்வனே நடக்கும்..


muthu-Covai
மே 14, 2025 08:58

mudichu vidunga. don't delay..


புதிய வீடியோ