எந்த சட்ட மீறலும் இல்லை; அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: 'தனது நாட்டை காப்பாற்றுவதற்கு எந்த சட்ட மீறலிலும் ஈடுபடவில்லை' என அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற முதல்நாளில் இருந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களை கண்டறிந்து நாடு கடத்த உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முனைப்பு காட்டி வருகிறார். ராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்றுவதைத் தடை செய்யும் முயற்சிகள் மற்றும் பரஸ்பர வரி உள்ளிட்டவற்றை டிரம்ப் செயல்படுத்தி வருகிறார்.இந்த அதிரடி உத்தரவுகள் விவாதத்தை கிளப்பி உள்ளது. இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் சமூகவலைதளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், 'தனது நாட்டை காப்பாற்றுவதற்கு எந்த சட்ட மீறலிலும் ஈடுபடவில்லை' என டிரம்ப் கூறியுள்ளார்.