உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வேறு யாரும் இதை செய்திருக்க முடியாது

வேறு யாரும் இதை செய்திருக்க முடியாது

ஈரான் மீது அமெரிக்கா நேரடி தாக்குதல் நடத்திய பின், அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகையில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியுள்ளதாவது:ஈரானில் உள்ள நடான்ஸ், இஸ்பஹான், போர்டோ ஆகிய மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம். முதன்மை தளமான போர்டோ முழுதுமாக அழிந்தது. குண்டு வீசிய அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக நாடு திரும்பின.இது ஒரு அற்புதமான ராணுவ வெற்றி. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் உலகின் முதன்மையான நாடு ஈரான். அவர்களுக்கு அணு ஆயுதம் கிடைக்கக் கூடாது என்பதே இந்த தாக்குதலின் நோக்கம். உலகில் வேறு எந்த ராணுவமும் இதை செய்திருக்க முடியாது.இப்போது அமைதிக்கான நேரம். ஆகையால், ஈரான் சமாதான பேச்சுக்கு வர வேண்டும். அவ்வாறு வராவிட்டால், எதிர்கால தாக்குதல்கள் எளிமையாகவும், வலிமையாகவும் இருக்கும். அமைதி பேச்சில் விரைவில் முடிவு எட்டப்படாவிட்டால், மேலும் பல இலக்குகள், வேகமாகவும், துல்லியமாகவும் தாக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

krishnan
ஜூன் 24, 2025 02:53

மகா நடிகன் கோமாளி வேசத்தில் கெட்டிக்காரன் உலகின் மிகச் சிறந்த சுயநல அரசியல்வாதி என்ற பல காரணத்தால் "நோ-பால்" பரிசை தள்ளுபடி வியாபார விலைக்கு கொடுக்க பயத்துடன் உலக நாடுகளால் பரிந்துரைக்கப்படுகிறது


Subburamu Krishnasamy
ஜூன் 23, 2025 07:40

Loose talk Trump. There is a great possibility to receive Nuclear arsenal from the other countries such weapons. It is very difficult to control nuclear wars in future. The universe is in danger because of greedy leaders and phonetics


முக்கிய வீடியோ