உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இது நடந்தால் நியூயார்க் நகரத்திற்கு நிதியை நிறுத்துவேன்: அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல்

இது நடந்தால் நியூயார்க் நகரத்திற்கு நிதியை நிறுத்துவேன்: அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: மேயர் தேர்தலில் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால் நியூயார்க் நகரத்திற்கான நிதியை நிறுத்துவேன் என அதிபர் டிரம்ப் அச்சுறுத்தி உள்ளார்.தற்போது ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எரிக் ஆடம்ஸ் என்பவர் நியூயார்க் மேயராக இருந்தார். அவர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன. இதனையடுத்து அவர் மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இன்று (நவம்பர் 4) மேயர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது.ஜனநாயக கட்சியின் சார்பில் உகாண்டாவில் பிறந்து நியூயார்க் நகரில் வளர்ந்த 34 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மம்தானியும், குடியரசுக் கட்சியின் சார்பில் கர்டிஸ் ஸ்லிவாவும் களத்தில் உள்ளனர். அமெரிக்காவில் முன்கூட்டியே ஓட்டளிக்கும் நடைமுறை இருக்கிறது. கடந்த அக்.,25ம் தேதியில் இருந்து ஓட்டுப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோஹ்ரான் மம்தானி அதிபர் டிரம்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த தேர்தலில் இவர் வெற்றிப்பெறுவரா? என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. இந்த தேர்தல் சர்வதேச கவனத்தை பெற்றிருக்கிறது. ஏனெனில் நியூயார்க் நகரம் அமெரிக்காவின் மிக முக்கியமான நகரமாகும். இந்த நகரில் நடக்கும் அரசியல் மாற்றம், நாடு முழுவதும் எதிரொலிக்கும்.இந்த தேர்தல் தொடர்பாக அதிபர் டிரம்ப் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மம்தானி வெற்றி பெற்றால் நியூயார்க் நகரம் பொருளாதார, சமூக பேரழிவை சந்திக்கும். நியூயார்க் நகர மேயர் தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால், குறைந்தபட்ச நிதியைத் தவிர, மீதமுள்ள நிதியை நான் வழங்கமாட்டேன். ஒரு கம்யூனிஸ்ட் தலைமையில் இருந்தால் அது மோசமாகிவிடும். அவர் திறமையானவர் இல்லை. உலகின் மிகப்பெரிய நகரத்தின் மேயராக, மம்தானியை கொண்டுவர முடியாது. நாம் இதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

உண்மை கசக்கும்
நவ 05, 2025 15:35

நம்ம ஊரு கம்மிகள் குஷியாகி விட்டார்கள். நியூயார்க் மேயராக ஒரு கம்மி வெற்றி.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 05, 2025 11:58

வீட்டுக்கு வீடு வாசப்படி. வலதுசாரி கோட்டானுக்கு பிடிக்கல்லைன்னா நிதி தருவதை நிறுத்தி பழி வாங்குவார்கள். இங்கேயும் இதே நிலைமை தான்.


Rathna
நவ 04, 2025 16:39

ஆப்பிரிக்காவை சேர்ந்த இவரது தந்தை குடும்பம் கம்மிஸ் சித்தாந்தம் கொள்கை உடையது. இதனால் எதிர்ப்பு வலுக்கிறது.


Anantharaman Srinivasan
நவ 04, 2025 11:36

வரவர டிரம்பின் ஆட்டம் ரொம்ப ஓவரா போச்சு. டிரம்பை பதவியிறக்கம் செய்ய ஏதேனும் வழியிருக்கிறதா..?


visu
நவ 04, 2025 15:17

மம்தானி ஒரு தீவிரவாத ஆதரவாளரும் கூட அப்புறம் எப்படி டிரம்ப் விடுவார் அமெரிக்கா சட்டப்படி எதிபரை பதவி நீங்கம் செய்வதெல்லாம் சுலபம் கிடையாது


Anand
நவ 04, 2025 11:17

ஜோஹ்ரான் மம்தானி ஏனைய மூர்க்கங்களை போலவே இந்தியாவின் மீது வன்மம் கொண்ட ....


Sun
நவ 04, 2025 10:17

என்னய்யா இவரு? இதுவரை வெளிநாட்டு தலைவர்களையே மிரட்டி வந்த டிரம்பர் தன்னோட ரேஞ்சை விட்டுக் கீழிறங்கி உள்ளூர் மேயரை மிரட்ட ஆரம்பிச்சுட்டாரே? மேயர் ரேஞ்சுக் கெல்லாம் ஒரு அதிபர் பதில் சொல்லலாமா? ஏன் உங்க குடியரசு கட்சியில R.S. பாரதி மாதிரியான ஆட்கள் யாருமே இல்லையா?


Shekar
நவ 04, 2025 10:10

யாரவது இந்த ஆளை குற்றம் கூட்டிவந்து குளிக்கவைங்கப்பா


Shekar
நவ 04, 2025 12:06

குற்றாலம் என்று திருத்தி வாசிக்கவும்


KOVAIKARAN
நவ 04, 2025 09:30

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோஹ்ரான் மம்தானி கம்யூனிஸ்டுகளின் இடதுசாரி சிந்தனையுள்ளவர். அவர் முஸ்லீம் என்பதற்காக பலர் இவர் வரக்கூடாது என்று நினைக்கவில்லை. ஆனால், இவர் இடதுசாரி கம்யூனிஸ்ட் சிந்தனையால் நியூயார்க் நகரத்தை மிகவும் மோசமாக மாற்றிவிடுவார் என்ற அச்சம் அமெரிக்காவில் பலருக்கும் உள்ளது. இப்போது அமெரிக்காவில் டிரம்ப் அவர்களது செயல்களை எதிர்க்கட்சிகளும் ஒரு இலை ஆளும் கட்சி உறுப்பினர்களும் விரும்பவில்லை. ஆனால் அவரை ஒன்றும் செய்யமுடியாது என்பதால் இவரைப் போன்றவர்களை அவர்கள் ஆதரிக்கக்கூடும். ஆனாலும் நியூயார்க் நகரத்திற்கும் அமெரிக்க மக்களுக்கும், தீவிரவாதிகளுக்கு ஆதரவாகப் பேசுவதால், இந்திய அரசுக்கும் இந்த ஜோஹ்ரான் மம்தானி மேயராக வராமல் இருப்பது நல்லது.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 05, 2025 11:54

மம்தானிக்கு பெரும்பான்மை மக்களின் மாபெரும் ஆதரவு உள்ளது. நீ ஏன் அநாவசியமா புலம்புறே?


Ramesh Sargam
நவ 04, 2025 09:20

இவ்வளவு நாட்கள் மற்ற நாட்டினரை மிரட்டிக்கொண்டிருந்த ட்ரம்ப், இப்பொழுது ஒரு மாறுதலுக்கு சொந்தநாட்டினரையே மிரட்ட ஆரம்பித்திருக்கிறார். அவ்வளவுதான்.


S.V.Srinivasan
நவ 04, 2025 09:04

இவரு போற போக்கை பார்த்தால் அந்த காலத்து முசோலினி, ஹிட்லர் எல்லாரையும் மிஞ்சிடுவார் போல இருக்கே.


Ramesh Sargam
நவ 04, 2025 10:02

அவர்கள் பரவாயில்லை. அவர்கள் நேரடியாக தங்கள் எதிரிகளை சுட்டுத்தள்ளினர். இவர் கொஞ்சம் கொஞ்சமாக மக்களை துன்புறுத்தி கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறார் அவ்வளவுதான் வித்தியாசம்.


சமீபத்திய செய்தி