உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒரு பக்கம் அடி தாங்க முடியாமல் திணறல்; மறுபக்கம் பொய் மூட்டையை அவிழ்த்து விடும் பாக்., பிரதமர்!

ஒரு பக்கம் அடி தாங்க முடியாமல் திணறல்; மறுபக்கம் பொய் மூட்டையை அவிழ்த்து விடும் பாக்., பிரதமர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்திய தாக்குதலில் 58 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என ஆப்கானிஸ்தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இருந்தாலும், 'எல்லை மோதலுக்குப் பிறகு நாங்க வலுவான பதிலடி கொடுத்தோம்' என பாக் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பொய் மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு இடையே மோதல் நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் நுார் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து, பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் பாகிஸ்தானில் எல்லைப்பகுதியில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர்.நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல், இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதியில் 20 இடங்களில் தலிபான் ராணுவத் தாக்குதல் நடத்தியது. திடீர் தாக்குதலில் சிக்கிக்கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர், ஆப்கன் வீரர்களிடம் சரண் அடைந்தனர்.இந்த தாக்குதலில் 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 25 ராணுவ முகாம்களை கைப்பற்றிவிட்டதாகவும் ஆப்கன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இருந்தாலும் வழக்கம்போல் இந்த தாக்குதல் குறித்து பாக் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பொய்களை அள்ளி வீசி இருக்கிறார்.இது குறித்து அவர் கூறியதாவது: பாகிஸ்தானின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்காது. மேலும் ஒவ்வொரு ஆத்திரமூட்டலுக்கும் வலுவான மற்றும் தக்க பதிலடி கொடுப்போம்.எல்லை மோதலுக்குப் பிறகு நாங்க வலுவான பதிலடி கொடுத்தோம். ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அதிகாரிகள் தங்கள் நிலத்தை பயங்கரவாத சக்திகள் பயன்படுத்த அனுமதி அளித்தனர். நமது ஆயுதப் படைகளின் தொழில்முறை சிறப்பில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

நிக்கோல்தாம்சன்
அக் 12, 2025 19:08

சோசியல் மீடியா வீரர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதையும் சோசியல் மீடியாவில் உள்ளவர்களிடம் விட்டுவிடுவார்களா ?


kiri
அக் 12, 2025 18:13

இந்த ஆளு பொய் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார்


raja
அக் 12, 2025 18:40

அதாவது தமிழக இப்போதைய இம்சை அரசன் இருபத்தி மூணாம் புலிகேசி போல...


புதிய வீடியோ