உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அம்மாடியோ... ஒரு பிட்காயின் மதிப்பு 1 லட்சம் டாலர்!

அம்மாடியோ... ஒரு பிட்காயின் மதிப்பு 1 லட்சம் டாலர்!

நியூயார்க்: 'கிரிப்டோகரன்சி' எனப்படும், மெய்நிகர் நாணயங்களில் ஒன்றான, 'பிட்காயின்' மதிப்பு, நேற்று முதன் முறையாக, ஒரு லட்சம் டாலரை தாண்டியது.அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்ப், கிரிப்டோகரன்சி வர்த்தகத்துக்கு ஆதரவானவர் என்பதால், தேர்தல் முடிவு வெளியானதில் இருந்து, அவற்றின் மதிப்பு அதிகரித்து வருகிறது. தேர்தலுக்கு முன்பு வரை 60,000 டாலர் என்ற மதிப்பில் வர்த்தகமான பிட்காயின், விறுவிறுவென உயர்ந்து, நேற்று ஒரு லட்சம் டாலரை தாண்டியது.அதாவது ஒரு பிட்காயின் மதிப்பு 84 லட்சம் ரூபாயாக ஆக உயர்ந்துஉள்ளது. கடந்த நான்கு வாரங்களில் மட்டும், 45 சதவீத உயர்வு கண்டுஉள்ளது. அடுத்த மாதத்தில் டிரம்ப் அதிபராக பதவியேற்றதும், கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என அமெரிக்க கரன்சி சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.அமெரிக்க பங்குச் சந்தை ஆணைய தலைவராக, மின்னணு வணிக சங்கத் தலைவரும், கிரிப்டோகரன்சி துறை நிபுணருமான பால் அட்கின்ஸ் நியமிக்கப்படுவார் என டிரம்ப் தெரிவித்ததும்; கிரிப்டோ ஆலோசனை கவுன்சில் ஒன்றை அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளதும், மெய்நிகர் நாணயங்களின் மதிப்பு கணிசமாக உயரக் காரணமானது.

இந்தியாவில் வரி

* கிரிப்டோகரன்சி வர்த்தகத்துக்கு அரசு 30 சதவீத வரி விதிக்கிறது* விற்கும்போது, வர்த்தகத்தில் லாபத்தின் மீது மற்றும் பொருட்கள், சேவைகளை வாங்க வரி பொருந்தும்* கிரிப்டோகரன்சியை வாங்கும்போது, ஒரு சதவீத வரி பிடித்தம் உண்டு* கிரிப்டோகரன்சியை வைத்திருக்கவும் சொந்த கணக்குகளில் பரிமாற்றம் செய்யவும் வரி இல்லை* கிரிப்டோகரன்சியை பரிசாக அளித்தால், அதை பெறுபவர் 30 சதவீத வரி செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை