உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒரு ரொட்டி பாக்கெட் ரூ.1100, ஒரு கிலோ வெங்காயம் ரூ.845! கண்ணீர் வரவழைக்கும் காசா

ஒரு ரொட்டி பாக்கெட் ரூ.1100, ஒரு கிலோ வெங்காயம் ரூ.845! கண்ணீர் வரவழைக்கும் காசா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசா: காசாவில் ஒரு பிரெட் பாக்கெட் ரூ.1100க்கும், ஒரு கிலோ வெங்காயம் ரூ.845க்கும் விற்கப்படுவதால் அங்கு வசிப்போர் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இஸ்ரேல் தாக்குதலால் காசாவின் நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமாக மாறி இருக்கிறது. எங்கு பார்த்தாலும், பசி, பட்டினி, வறுமை என மக்கள் தவித்து வருவதாக சுகாதார அமைச்சகம் கூறி வருகிறது. போரால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு காசாவில் உள்ள லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.அங்கு அவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் உணவு வழங்கினாலும், அவற்றை பெற ஏராளமான மக்கள் காத்துக் கிடக்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டுமே அவர்களுக்கு கிடைக்கிறது. உணவு பொருட்கள் தட்டுப்பாட்டால் மக்கள் பசியிலும், பட்டினியிலும் தவித்து வருகின்றனர். தெற்கு காசாவில் மட்டுமல்லாமல் மத்திய காசா பகுதியிலும் மக்களின் நிலை பரிதாப சூழலில் காணப்படுகிறது. மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக அங்குள்ள பேக்கரிகள் மூடப்பட்டு தற்போது திறக்கப்பட்டு உள்ளன. ஆனால் அங்கு விற்கப்படும் உணவு பொருட்களின் விலை கேட்போரை தலைசுற்ற வைக்கிறது.ஒரு பிரெட் பாக்கெட் (15 ரொட்டித்துண்டுகள் கொண்டது) விலை ரூ.1100 ஆக விற்கப்படுகிறது. சராசரியாக ஒரு துண்டு ரொட்டி மட்டும் 73 ரூபாய் எனலாம். இந்த பிரட் பாக்கெட்டை வாங்க முடியாமல் ஏராளமானோர் தவித்து பசியால் துவண்டு போயிருக்கின்றனர். பிரெட் பாக்கெட் மட்டுமல்லாமல் மற்ற உணவுகளின் விலையும் கேட்போரை மயக்கம் போட வைக்கிறது. ஒரு காபித்தூள் பாக்கெட் ரூ.110, ஒரு கிலோ வெங்காயம் ரூ.845, சமையல் எண்ணெய் ரூ.1,267 என விலைகள் உச்சத்தில் இருக்கின்றன. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு, கட்டுப்பாடில்லாத விலை என காசா மக்களின் நிலை உலக நாடுகளை கவலைக் கொள்ள செய்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

DJ Serve Life
நவ 29, 2024 12:06

இந்த "பண" மதிப்பு விலை இந்திய நாட்டு சிறப்புப் பொருளாதார மண்டலம் சார்ந்ததா இல்லை கனடா மக்கள் பகுதியை சார்ந்ததா? அவர்கள் சராசரி மாத "பண" மதிப்பு மற்றும் வருமானம் பற்றி கூறவில்லை திகில் புரளி கிளப்புவது ஏன்?


NAGARAJAN
நவ 28, 2024 09:53

காரணகர்த்தாக்கள். . . . . வேறு யார். அமெரிக்கா மற்றும் அவர்களின் கூட்டாளிகள். .


நிக்கோல்தாம்சன்
நவ 22, 2024 21:15

இன்னமும் அமெரிக்கா ஆட்டுவிப்பது போல ஆடும் ... பாவம் அப்பாவி நடுத்தட்டு மக்கள்


Ramesh Sargam
நவ 22, 2024 20:25

போரின் கொடுமைகளை போர் தொடுக்கும் நாட்டின் தலைவர்கள், அதிபர்கள் உணரவேண்டும். அவர்கள் பத்திரமாக அவர்கள் அரண்மனையின் உள்ளே முழு பாதுகாப்புடன் அவர்கள் குடும்பத்தினருடன் இருப்பார்கள். இதுபோன்ற பட்டினி அவலங்கள் அவர்களுக்கு எங்கே தெரியும். ஒருமுறை அப்படிப்பட்ட இடங்களுக்கு சென்று மக்கள் படும் கஷ்டங்களை அவர்கள் பார்க்கவேண்டும்.


GMM
நவ 22, 2024 20:03

சுமார் 50 மேற்பட்ட இஸ்லாம் நாடுகள். ? போர் பஞ்சம். உதவ ஆள் இல்லை. மதத்தில் மனிதர் ரத்த பாசம் கொள்வதில்லை?தமிழகத்தில் ஒருவர் குற்றம் புரிந்தால், அந்த ஊர் மக்கள் குற்றவாளியை அரசிடம் ஒப்படைத்து விடுவர் . இந்துக்களின் வாழ்வியல் முறை , சனாதன தர்மம் தான் உயிர் கொடுக்கும். மத மாற்ற தடை சட்டம் இந்தியாவில் அமுல்படுத்த வேண்டும். முன்னோர் கூறியது வேத வாக்குகள்.ஞானம் மூலம் . தொழில் இல்லை. பயிர் இல்லை. போரிட்டு கொள்ளையடித்து வாழ 18ம் நூற்றாண்டு இல்லை. இஸ்ரேலிய பணய கைதிகளை விடுவிக்க வேண்டும்.


தமிழ்வேள்
நவ 22, 2024 19:50

நீதிக்கு சிங்கி அடிக்கும் பாலஸ்தீனிகள்....இனிமே எவராவது ஜிஹாத் சொல்லுவீங்க?...


நரேந்திர பாரதி
நவ 23, 2024 03:22

இனி தீணிக்கும் சிங்கிதான்


visu
நவ 22, 2024 19:18

எண்ணி துணிக கருமம் ... என்பது குறள் .சும்மா இருந்த இஸ்ரேலை தாக்கிய தீவிரவாதிகள் தான் இதற்கு காரணம் .காசாவை பொறுத்தவரை பொதுமக்கள் எல்லாம் கிடையாது .கிட்டத்தட்ட எல்லோருமே தீவிரவாதிகள் அல்லது அவர்களை ஆதரிப்பவர்கள்தான் .இன்றளவும் பிணையக்கைதிகள் அங்கேதான் இருக்கிறர்கள் என்பதை மறக்க கூடாது.இவர்கள் துணையின்றி அது சாத்தியமில்லை .ஒருபக்கம் பாதிக்கப்பட்டவர்கள் போல நடித்து கொண்டு இன்னொருபக்கம் தீவிரவாத ஆதரவு நிலை .


Dharmavaan
நவ 22, 2024 18:27

இனி இவர்கள் தீவிரவாதத்தை எண்ணிக்கூட பார்க்கமாட்டார்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 22, 2024 18:06

இந்த லட்சணத்துல 2047 க்குள்ள பாரதத்தை இஸ்லாமிய நாடாக்கப் போறாங்களாம் ...


ஜெய்ஹிந்த்புரம்
நவ 23, 2024 02:19

இந்த உருட்டை சொல்லி மிரட்டுறதே உன்னைப் போன்ற சங்கிகள் தானேப்பூ அதை இப்போ இப்படி மாத்தி உருட்டுறியே


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 23, 2024 10:26

" உன்னைப் போன்ற சங்கிகள் தானேப்பூ " ..... நான் படித்தது உன்மூர்க்க ஆட்களின் சமூக வலைத்தளப்பக்கங்களில் ... சில இடங்கள்ல சபதமும் எடுத்திருக்காங்க .... தமிழ்நாட்டுலயும் சூளுரை ஏற்றிருக்கானுங்க ..... ஒரு உருட்டும் இல்ல ..... பாஜக செல்வாக்கு இழக்கும் முன்பே தனிமைப் படுத்தப்படுவீர்கள் ... எழுதி வெச்சுக்க ....


Rajasekar Jayaraman
நவ 22, 2024 17:39

காசா பொதுவெளியில் மன்னிப்பு கேட்கட்டும் இஸ்ரேல் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வருவார் மோடி.


ஜெய்ஹிந்த்புரம்
நவ 23, 2024 02:21

சோகத்திலும் காமெடி தேவையா?


முக்கிய வீடியோ