உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன் போரில் ஒரு லட்சம் வடகொரிய வீரர்கள்; பதிலுக்கு ஏவுகணை தொழில்நுட்பம் தரும் ரஷ்யா

உக்ரைன் போரில் ஒரு லட்சம் வடகொரிய வீரர்கள்; பதிலுக்கு ஏவுகணை தொழில்நுட்பம் தரும் ரஷ்யா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு உதவி செய்ய, தனது நாட்டு ராணுவ வீரர்கள் ஒரு லட்சம் பேரை அனுப்ப, வட கொரியா திட்டமிட்டுள்ளது; இதற்கு பதில் உதவியாக அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா வழங்க முன் வந்துள்ளது.உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தாலும், இருநாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 'எங்களுக்கு எதிரான போரில் வடகொரிய ராணுவத்தை ரஷ்யா பயன்படுத்துவதாக' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.இதற்கிடையே, வட கொரியா ஏற்கெனவே, ரஷ்யாவிடமிருந்து ராணுவ உபகரணங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு, உதவி செய்ய, ஒரு லட்சம் வீரர்களை அனுப்ப, வட கொரியா திட்டமிட்டுள்ளது. வட கொரியா ஒரு ஹைப்பர் சோனிக் இடைநிலை பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை மேற்கொண்டது.உக்ரைனுக்கு எதிரான போரில் உதவி செய்வதற்காக அதிநவீன ஏவுகணை தொழில்நுட்பத்தை வடகொரியாவுக்கு ரஷ்யா வழங்கியுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. அந்தத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணையை தான் வடகொரியா சோதனை செய்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. வடகொரியாவின் ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனை குறித்து, ஐக்கிய நாடுகள் சபைக்கான துணை அமெரிக்க தூதர் டோரதி காமில் ஷியா கவலை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sampath Kumar
ஜன 10, 2025 11:17

ஆக மூன்றாம் உலக போருக்கு பிள்ளையார் சுழி போடுகிறார்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 10, 2025 10:39

ரஷ்ய மாணவியருக்கு என்னென்னவோ அட்வைசெல்லாம் ரஷ்யா பண்ணுது ன்னு சொல்றீங்க .... வடகொரிய வீரர்களுக்கு லட்டோ லட்டு ....


அப்பாவி
ஜன 10, 2025 10:17

வடகொரியாவில் பட்டினியால் சாசரை விட ரஷ்யாவில் நல்லா துண்ணுட்டு, வோட்கா குடிச்சிட்டு சண்டை போட்டு சாவலாம். வட கொரியாவுக்கும் மக்கள் தொகை பாரம் குறையும்.


சிவம்
ஜன 10, 2025 09:49

வட கொரியா அதிபன் ஏற்கனவே ஒரு கொலை வெறியன். இதில் இவர்களுக்கு ஏவுகணை தானம் வேறு. ரஷயனுக்கு மூளை மழுங்கி விட்டதா. மோடிஜி தான் ஏதாவது செய்ய வேண்டும்


Senthoora
ஜன 10, 2025 09:23

இப்போல்லாம் ஒரு நாட்டில் போர்நடந்தால் போட்டிபோட்டு உதவி செய்து, தங்கள் பழைய ஆயுதங்களை வித்தும் ஒற்றுமையை சீர்குலைத்தது தாங்கள் மட்டும் நல்லாக இருக்கபார்க்கிறாங்க. இந்த போரால் பூமி நிலம் தாக்கப்படுகிறது, நில அதிர்வு எட்படுகிறது, காற்றில் புகைமண்டலம் மாசு வேறுபடுகிறது, இதனால் ஏழை நாடுகளில் வெள்ளம், நிலநடுக்கம், சூறாவளி எட்படுகிறது. இதெல்லாம் அந்த மகா நாட்டில் பேசமாட்டார்களா?


ரகுநாதன்
ஜன 10, 2025 08:59

மனிதன் இருக்க மனிதம் தொலைந்தோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை