உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க ராணுவ தளபதியுடன் நம் ராணுவ தளபதி சந்திப்பு

அமெரிக்க ராணுவ தளபதியுடன் நம் ராணுவ தளபதி சந்திப்பு

வாஷிங்டன்: நான்கு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நம் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, அந்நாட்டின் ராணுவத் தளபதி ஜெனரல் ராண்டி ஜார்ஜை சந்தித்து பேசினார்.நம் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, நான்கு நாள் பயணமாக 13ம் தேதி அமெரிக்காவுக்கு சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில், சந்திப்புகளில் அவர் பங்கேற்றார்; அங்குள்ள ராணுவ பிரிவுகளையும் சுற்றி பார்த்தார்.அந்த நாட்டின் ராணுவத் தளபதி ஜெனரல் ராண்டி ஜார்ஜை நேற்று அவர் சந்தித்தார். இரு தரப்பு உறவுகள், பாதுகாப்பை பலப்படுத்துவதில் ஒருங்கிணைந்து செயல்படுவது, சர்வதேச பாதுகாப்பு நிலவரம் உள்ளிட்டவை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்புசாமி
பிப் 16, 2024 07:45

போட்டிருக்கிற டிரஸ்ஸிலே அந்நிய அடையாளம் தெரியுதே


Priyan Vadanad
பிப் 16, 2024 02:27

கூடவே நம்ம திராவிட மாடல் தளபதியையும் அனுப்பியிருக்கலாமென்று வரும் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி