உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆக்ஸ்போர்டு பல்கலை வேந்தர் தேர்தல்: இம்ரான் கானை முந்திய இந்தியர்!

ஆக்ஸ்போர்டு பல்கலை வேந்தர் தேர்தல்: இம்ரான் கானை முந்திய இந்தியர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: ஆக்ஸ்போர்டு பல்கலை புதிய வேந்தர் பதவிக்கு போட்டியிடும் 38 இறுதிப் போட்டியாளர்களை பல்கலை நிர்வாகம் இன்று அறிவித்தது, இதில் இந்திய வம்சாவளி வேட்பாளர்களும் அடங்குவர், ஆனால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானைத் தவிர்த்துவிட்டனர்.இறுதி தேர்வு பட்டியலில், அங்கூர் ஷிவ் பண்டாரி, பெர்க்ஷயரில் உள்ள பிராக்னெல் நகரின் முதல் இந்திய வம்சாவளி மேயர் ஆவார்.நிர்பால் சிங் பால் பங்கல், சர்வதேச தொழில் முனைவோர் ஆவார். பேராசிரியர் மற்றும் மருத்துவ நிபுணரான பிரதிக் தர்வாதி,முன்னாள் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் வில்லியம் ஹேக், முன்னாள் தொழிற்கட்சி அரசியல்வாதி பீட்டர் மண்டேல்சன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளில் அடங்குவர்.தேர்வு நடவடிக்கைகளில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆக்ஸ்போர்டு பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:விண்ணப்பித்திருந்தவர்கள் அவரவர் துறைகளில், ஆர்வம், செயல்பாடு, திறன்நடவடிக்கை ஆகிவற்றை எங்களது குழு ஆய்வு செய்து இறுதி பட்டியலை தயார் செய்துள்ளது.புதிய வேந்தரை தேர்ந்தெடுக்க,ஆன்லைன் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்துள்ளோம். இதில் யார் அதிக ஒட்டுக்களை பெறுகிறாரோ அவரை வேந்தராக தேர்வு செய்வோம்.அக்டோபர் 28ல் முதல் முதல் சுற்று வாக்கெடுப்பு துவங்கும். 28 பேரில் 5 பேரை தேர்வு செய்வோம். வெற்றி பெற்ற ஐந்து பேரை நவம்பர் 4ம் தேதி அறிவிப்போம்.2வது சுற்று, நவம்பர் 18ம் தேதி அறிவிப்போம். அதில் வெற்றிபெற்ற புதிய வேந்தர் யார் என்பதை நவம்பர் 24ம் தேதி அறிவிப்போம். புதிய வேந்தர் 10 ஆண்டு அந்த பதவியில் இருப்பார்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

J.V. Iyer
அக் 17, 2024 04:44

நான் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரையும் வேந்தராக முன்மொழிகிறேன். ஒரே வருடத்தில் அக்ஸ்போர்டு பல்கலையை தமிழக பல்கலைக்கு நிகராக மாற்றுவார்கள். நம் தமிழக பல்கலைக்கழகங்கள்தான் எதிலும் முதல் ஆயிற்றே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை