உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக். பிரதமர் வேட்பாளராக ஒமர் அயூப்கானை அறிவித்தார் இம்ரான்கான்

பாக். பிரதமர் வேட்பாளராக ஒமர் அயூப்கானை அறிவித்தார் இம்ரான்கான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 101 சுயேச்சை எம்.பி.க்களை பெற்றுள்ள இம்ரான்கான் ,ஒமர் அயூப் கான் என்பவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது திருப்பம் ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தானில் சமீபத்தில் பொதுத் தேர்தல் நடந்தது. இதில் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாக்., தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற 101 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மேலும் பாக்., முஸ்லிம் லீக் - நவாஸ் 75; பாகிஸ்தான் மக்கள் கட்சி 54; முட்டாஹிதா குவாமி இயக்கம் - பாக்., 17 இடங்களைக் கைப்பற்றின.ஆட்சி அமைக்க 133 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பாக்.,கில் புதிய அரசு அமைவதில் குழப்பம் நீடித்து வருகிறது.. இந்நிலையில் 101 சுயேச்சை எம்.பி.க்களை வைத்து இம்ரான் கான், நேற்று பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளராக ஒமர் அயூப்கானை அறிவித்தார். இம்ரானுக்கு எந்த கட்சி ஆதரவு என தெரியாத நிலையில் இந்த திடீர் அறிவிப்பு பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.முன்னதாக பாகிஸ்தான், முஸ்லிம் லீக்- பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைந்து கூட்டணி அரசு அமைக்க முடிவு செய்து, ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramaraj P
பிப் 16, 2024 21:22

ஓட்டு சீட்டு முறை. ஒரு இடத்தில் (எல்லா இடங்களிலும்) நடந்தது மொத்தமாக 43 பேர் தான் ஓட்டே போட்டார்கள். ஆனால் அங்கே ஜெயித்த வரின் வாக்குகள் 870.


Kuppan
பிப் 16, 2024 15:14

அங்கும் ஒரு ஓபிஎஸ் கிடைத்து விட்டார் போல்.


HoneyBee
பிப் 16, 2024 09:16

அங்கு கூட ஒரு அடிமை தயாராகிறது ..வேற வழி இல்ல..அடுத்து ஒர் ஆண்டில் இவன் கதையும் முடியும்... பாவம் இந்த அடிம


Duruvesan
பிப் 16, 2024 07:34

விடியல் ராவுள் மணி பிரச்சாரம் எடுபடல போல


Raj
பிப் 16, 2024 05:01

ஆக வெற்றி பெற்றும் பிரயோஜனம் இல்லை... சபாஷ்......


vadivelu
பிப் 16, 2024 06:45

மொத்தத்தில் உருப்படாத ஜனநாயகம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை