உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதலில் விமானப்படை தளம் சேதம்: ஒப்புக்கொண்டது பாகிஸ்தான்

ஆப்பரேஷன் சிந்தூர் தாக்குதலில் விமானப்படை தளம் சேதம்: ஒப்புக்கொண்டது பாகிஸ்தான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது சிறப்பு நிருபர்ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது, நூர் கான் விமானப்படை தளத்தின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதில் சேதம் அடைந்ததை பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ucbvq2s4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான இஷார் தார் கூறியதாவது: ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமான தளத்தை இந்தியா குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அப்போது பாதுகாப்பு பணியின் ஈடுபட்ட வீரர்களை தாக்கினர். இந்தியா பாகிஸ்தானை நோக்கி ட்ரோன்களை ஏவியது. 36 மணி நேரத்தில் 80 ஆளில்லா விமானங்கள் அனுப்பப்பட்டன.80 ஆளில்லா விமானங்களில் 79 ஆளில்லா விமானங்களை நாங்கள் இடைமறித்து, தடுத்தோம். ஒரு ஆளில்லா விமானம் மட்டுமே ஒரு ராணுவ தளத்தை சேதப்படுத்தியது. மே 10ம் தேதி அதிகாலையில் நூர் கான் விமானப்படை தளத்தை தாக்கி இந்தியா தவறு செய்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார். ஆப்பரேஷன் சிந்தூர் முடிவில் பாகிஸ்தானில் உள்ள பல விமானப்படை தளங்கள் சேதம் அடைந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

SW VHSB
டிச 28, 2025 20:28

THATS IT


பா மாதவன்
டிச 28, 2025 20:19

ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது, இந்தியா தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் விமானப் படை தளம் சேதம் அடைந்ததை பாகிஸ்தான் அரசே ஒப்புக்கொண்டாலும், நம்ப ஊர் பாகிஸ்தான் ஆளு.ராகுல் எப்படி ஒத்துக் கொள்வார்.


Rajarajan
டிச 28, 2025 17:14

அண்ணனுக்கு காலை காபி கொடுங்கள். இவ்வளவு நாள் கழித்து, இப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்துள்ளார். அதுசரி, எங்கே நமது ராகுல் அண்ணன் ? எப்போதும் தமாஷா பேசுவாரே ??


Gopal Kadni
டிச 28, 2025 16:50

இன்னும் என்னென்ன தாக்கப்பட்டன என்பதை தயவு செய்து இப்பவே சொல்லுங்க. எங்களுக்கு வேண்டாம் - நாங்கள் நம்புகிறோம். உங்கள் பப்புவிற்கு..


கணேசன்
டிச 28, 2025 16:17

பாகிஸ்தானே ஒப்புக்கொண்ட பிறகாவது நமது இந்திய ராணுவத்தின் வலிமையையும் தியாகத்தையும் வெளிநாட்டு கைக்கூலி ராகுல் ஒத்துக்கொள்வாரா ?


Mohanakrishnan
டிச 28, 2025 22:51

மாட்டார் முடவனுக்கு அதற்க்கான மூளை இல்லை


Iyer
டிச 28, 2025 15:45

ஒப்புக்கொள்ளாமல் முடியுமா ? தாக்கப்படும் ஒவ்வொரு TARGET ஐயும் இந்தியா - JET ல் இருந்தே படம் பிடிக்கிறதே - மறுக்கமுடியாத EVIDENCE இந்தியாவிடம் உள்ளதே


புதிய வீடியோ