உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பகையை துாண்டி பொய்களை பரப்பிய பாக்., தளபதிக்கு பதவி உயர்வு!

பகையை துாண்டி பொய்களை பரப்பிய பாக்., தளபதிக்கு பதவி உயர்வு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இடையே பகையை துாண்டும் வகையில் பேசி, வன்மத்தை கொட்டிய பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு, அந்நாட்டு அரசு பதவி உயர்வு வழங்கியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rlgyp6a5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருப்பவர் அசிம் முனீர். கடந்த ஏப்., 17ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் 'இரு நாடு கோட்பாடு' என மத அடிப்படையில் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பேச்சு தான் பஹல்காம் தாக்குதலுக்கு தூண்டுகோலாக அமைந்தது. அவர் பேசுகையில், ''வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், நாம் ஹிந்துக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். நம் முன்னோரும் அதைத்தான் நினைத்தனர். நமது மதம் வேறு; நமது பழக்க வழக்கங்கள் வேறு. நமது மரபுகள் வேறு. நமது எண்ணங்கள் வேறு. லட்சியங்கள் வேறு. இருநாட்டு கோட்பாட்டின் அடித்தளம், அங்குதான் அமைக்கப்பட்டது.நாம் ஒரு தேசம் அல்ல; இரண்டு நாடுகள். அதனால்தான், இந்த நாட்டை உருவாக்க நமது முன்னோர் இடைவிடாத போராட்டம் நடத்தினர். இந்த நாடு உருவாக நாங்கள் நிறைய தியாகங்களைச் செய்துள்ளோம். அதை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும். பாகிஸ்தானின் கதையை அடுத்த தலைமுறைக்கு ஒவ்வொரு பெற்றோரும் சொல்ல வேண்டும்,'' என்றார்.இதனைத் தொடர்ந்து காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்தது. அங்கு சுற்றுலா பயணிகளை, அவர்களின் மதம் குறித்து கேட்டு பயங்கரவாதிகள் கொன்றனர். இதனையடுத்து, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி நுாற்றுக்கணக்கான பயங்கரவாதிகளை கொன்றது.இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக கூறி, அப்பாவி மக்கள் மற்றும் நமது ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. பாகிஸ்தானின் ஒவ்வொரு முயற்சியையும் இந்திய ராணுவம் தவிடுபொடியாக்கிறது. இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதும், அந்நாடு போரை நிறுத்தும்படி கெஞ்சியது. இதனால் தனது இலக்கு நிறைவேறியதால், மனமிரங்கிய இந்தியா போரை நிறுத்தியது.ஆனால்,' கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக' நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என பொய்யான தகவல்களை அந்நாட்டு மக்கள் மத்தியிலும், சர்வதேச ஊடகங்களிலும் பாகிஸ்தான் ராணுவம் பரப்பி வருகிறது. இந்திய விமானப்படை தளங்களை அழித்து விட்டோம் என்றும் அப்பட்டமாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் புளுகி வருகின்றனர்.இதற்கு காரணமான, ராணுவ தளபதி அசிம் முனீருக்கு ' பீல்ட் மார்ஷல்' பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில், 'பீல்டு மார்ஷல்' என்ற பதவி உயர்ந்த பதவியாகும். இதற்கு முன்னர் பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்த முகமது அயூப் கானுக்கு இந்த பதவி உயர்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.எப்படி கிடைத்தது பதவி?பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனிர், விதிமுறைகளின்படி இந்த பதவிக்கு தகுதியற்றவர். அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் அடைத்து, அவர் தேர்தலில் போட்டியிடாமல் பார்த்துக்கொள்கிறேன் என்று உத்தரவாதம் அளித்த காரணத்தால், அவருக்கு ராணுவ தளபதி பதவியை தற்போதைய அரசு வழங்கியது. அதன்படி அவர், இம்ரான் கானை சிறையில் அடைத்து, அரசுக்கு பிரச்னை வராமல் காப்பாற்றினார். அப்படி தங்களை காப்பாற்றியவருக்கு, இப்போது பதவி உயர்வு வழங்கியுள்ளது பாகிஸ்தான் அரசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

கண்ணன்
மே 21, 2025 11:53

நம்மூர் ஃபன்ஸி ஸ்டோர் கடைகளில் கிடைக்கும் மெடல்களை இவர்கள் வாங்கிக் குத்திக் கொள்கின்றனர். இதுவரை ஒரு போரிலாவது சொல்லிக் கொள்ளும்படியாக இவர்கள் சண்டையாவது செய்தனரா? கம்பர் சொல்லுயதைப் போல் நாய் தரக் கொள்ளும் சீயம் நல்லரசென்று நக்கான்


Kasimani Baskaran
மே 21, 2025 04:04

எந்த நிபந்தனையும் இல்லாமல் இந்தியா தாண்ணீர் கிடையாது என்று சொன்னபின்னரும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்ட பாக்கிகளை இன்னும் வீரர்கள் என்று நினைப்பது சுத்தமான கோழைத்தனம். ஆனாலும் அந்த நாட்டினர் அதை பாராட்டுகிறார்கள். இந்தியாவில் இன்னும் அவர்களை ஆதரிக்கும் எதிரிக்கட்சிகளுக்கு ஆதரவு இருப்பது ஒரு பகுதி இந்தியர்கள் உணர்ச்சியற்ற பிண்டங்கள் என்பதை உறுதி செய்கிறது.


உ.பி
மே 21, 2025 03:10

ஆக...போர்கிஸ்தானிலும் எங்கள் மாடல் ஆட்சி தான்


மீனவ நண்பன்
மே 21, 2025 02:59

இவரை IMF தலைவராக நியமிக்க பாகிஸ்தான் பாடுபட வேண்டும் ..கடன் வாங்குவது எளிதாக இருக்கும்


RAJ
மே 21, 2025 00:41

போடா போடா .... சூனாபானந சும்மா இல்லை..


ஜெய்ஹிந்த்புரம்
மே 20, 2025 23:20

அண்ணாமலையை ஞாபகப்படுத்துகிறார்.


chanakyan
மே 20, 2025 21:55

இவரது தந்தை ஒரு தீவிர மத அடிப்படைவாதி. இவரும் அவ்வாறே வளர்ந்துள்ளார். ஆனால் இத்தகைய பின்னணி கொண்டவர்கள் அங்கு ராணுவ தலைமை பொறுப்பில் இருந்ததில்லை. இவர் உயிரோடு இருக்கும் வரை, பெரியதாக வேறு எதுவும் நடக்காவிட்டல் கடைசி வரை அங்கு அறிவிக்கப்படாத சர்வாதிகார ஆட்சி தான். நாமும் தொடர்ந்து நமது கண்காணிப்பை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.


Murugesan
மே 20, 2025 21:42

திராவிட மாடல் ஆட்சி பாக்கிஸ்தானில்


மீனவ நண்பன்
மே 20, 2025 20:23

நவம்பரில் பதவி காலம் முடிவடையும் ..மேலும் மூன்று ஆண்டு பதவியில் தொடர போடும் திட்டம் இம்ரான் கான் ஜெயிலிலிருந்து விடுதலை ஆகும் வாய்ப்பு குறைவு


கல்யாணராமன்
மே 20, 2025 19:45

இருவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லொகொண்டு இருக்கிறீர்கள். தேசபற்றின் காரணமாக இந்திய மக்கள் நம் தேசத்தை ஆதரிக்கிறோம். ஆனால் அரசு அதான் மத்திய அரசு மீண்டும் வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்ச்சியை நாளை முதல் தொடங்க போகிறதாம். வெட்கமாக இல்லை? சூடு சொரணை இல்லை? அப்படி என்ன அவசரம்? கொடி இறக்க நிகழ்ச்சி நடத்தாவிட்டால் குடியா மூழ்கிவிட போகிறது? இந்த முடிவை எடுத்த அரசியல்வாதியை, அதிகாரியை தண்டிக்க வேண்டும்.


Ragupathi
மே 20, 2025 21:27

அட ராமா உன்னோட உ பி பாசம் புரியுது. இதெல்லாம் ஒரு ராஜதந்திர நடவடிக்கை ஆனா இது உனக்கோ உன் கட்சிக்கோ புரியாது விடு.


கல்யாணராமன்
மே 20, 2025 21:44

ரகுபதி என்னை உ பி என்று விளிக்கும் உமது அறிவை எப்படி மெச்சுவது. இந்த லட்சணத்தில் இந்திய ராஜா தந்திரத்தை பற்றி வியாக்கியானம் செய்கிறாய். எல்லாம் நேரம்.


Chanakyan
மே 20, 2025 21:46

"ஏதோ இருவர் சண்டை போட்டார்கள், போனால் போகிறது என்று இந்தியாவை ஆதரிக்கிறேன்". இது தான் இந்நாட்டின் சாபக்கேடு. இப்படி இருந்து கொண்டு முடிவை குறை வேறு சொல்வது. இது போன்ற மனப்பான்மை கொண்டவர்களையும் தாண்டி நாட்டை முன்னேற்றிக் கொண்டிருக்கும் அரசுக்கும், காத்துக் கொண்டிருக்கும் ராணுலத்திற்கும் ஒரு சிறப்பு சல்யூட்.