உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை: பாகிஸ்தான் கோர்ட் உத்தரவு

முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு சிறை: பாகிஸ்தான் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லமாபாத்: ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பி.டி.ஐ., கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான், பல்வேறு குற்றவழக்குகளில் சிக்கி சிறையில் இருந்து வருகிறார். பரிசுப் பொருட்கள் பெற்றதில் முறைகேடு, அரசு ரகசியங்களை கசிய விட்டது உள்ளிட்ட வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9w9k4eu7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் அரசுக்கு வர வேண்டிய பணத்தை, தனி நபர் அறக்கட்டளையில் வரவு வைத்து, அதற்கு லஞ்சமாக பல நுாறு ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.கடந்த 2023ம் ஆண்டு, ஊழலை தடுக்கும் பொறுப்பு நிறுவனமான, பாகிஸ்தானின் தேசிய பொறுப்புடைமை பணியகம் (NAB), இந்த குற்றச்சாட்டை முன் வைத்தது.இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி, தொழிலதிபர்கள் சிலர் மீது இந்த குற்றச்சாட்டு தொடரப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், 3 முறை தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும், அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது.வழக்கில் தொடர்புடைய மற்ற அனைவரும் தலைமறைவு ஆகி விட்டனர். அவர்களை, தேடப்படும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

RAMAKRISHNAN NATESAN
ஜன 17, 2025 22:05

சிறையிலேயே போட்டுவிடுவார்கள் .....


Ramesh Sargam
ஜன 17, 2025 21:17

இம்ரான் தமிழகத்தில் குற்றம் புரிந்திருந்தால், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, பிரதமர் பதவியை விட ஒரு பதவி கொடுத்திருப்பார்கள்.


ram
ஜன 17, 2025 17:16

இங்கு சில கூத்தாடிகள், பொருளாதார அரசியல் மேதைகள், சில இம்ரான்கான் ஆட்சியை ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளின, இப்போது ????


naranam
ஜன 17, 2025 16:19

நம்ம ஜாமீன் செட்டியார், அவருடை மகன், பழமொழி, மன்னர், செங்கல் பா..ஜி ஆகியோர் நீதி மன்றங்களின் உதவியோடு தப்பி விட்டனரே! நம் நாட்டில் நீதி பரிபாலனம் இந்த அவலட்சத்தில் தான் இருக்கிறது. மத்திய அரசும் இதற்கு ஒரு காரணமாகும்.


வாய்மையே வெல்லும்
ஜன 17, 2025 15:40

அய்யகோ நெஞ்சம் பொறுக்குதில்லையே எனதருமை இம்ரான் திருவாளருக்கு பதினான்கு ஆண்டுகள் சிறையா.. இங்க சக்கரை மூட்டை திருடியவனுக்கு/ மழையில் கரைந்துவிட்டது என நாக்கூசாமல் புளுகியவனுக்கு பல்லக்கில் ரதம் தான் எடுக்கவில்லை . பாக்கிஸ்தான் ஊழலை எதிர்க்கிறது .. தமிழ்நாடு ஊழலில் திழைக்கிறது .. அய்யகோ நெஞ்சு பொறுக்குதில்லையே


karupanasamy
ஜன 17, 2025 15:35

எதுக்கு ஒத்த விரலை காட்டுறான் ஒன் பாத் ரூம் போகணுமா?


Sampath Kumar
ஜன 17, 2025 15:27

சபாஷ் மூர்க்கத்தனமான தீர்ப்பு அனாலும் உண்மையான தீர்ப்பு பாராட்டுக்கள் நம்மவூரில் இப்படி நடக்குமா ? கனவில் கூட நடக்காது


ராமகிருஷ்ணன்
ஜன 17, 2025 15:10

நல்ல வேளையாக தூக்குலே தொங்க விடலே. அனேகமாக ஜெயில்ல மண்டைய போட்டுருவான்


sundarsvpr
ஜன 17, 2025 14:47

பாகிஸ்தான் பிரதமர் தண்டனை பெற்றது அந்த நாட்டில் நீதிமன்றம் நன்றாக செயல்படுகிறது என்பது நிசர்சன உண்மை. தமிழ்நாட்டில் ஒரு அமைச்சர் குற்றவாளி என்று மக்களுக்கு தெரியும். நீதிமன்றம் அறியமுடியவில்லை. அந்த அமைச்சர் ஜாமினில் உள்ளார் அமைச்சராகவும் உள்ளார். நீதிமன்றம்தான் விடை காணவேண்டும். விடை காணமுடியாவிட்டால் ஏன் திருவுள்ள சீட்டு மூலம் தீர்ப்பு வழங்கக்கூடாது?


சிந்தனை
ஜன 17, 2025 14:06

பரவாயில்லையே. அப்டின்னா, தமிழகத்து திருடர்களையும் பிடிக்கும் தண்டிக்கும் பொருப்பை அவங்கள்ட கொடுக்கலாம் போல இருக்கே....


சமீபத்திய செய்தி