உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மோசமான நாடு; ஐ.நா.,வில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மோசமான நாடு; ஐ.நா.,வில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: 'உலகளாவிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு மோசமான நாடு'' என ஐ.நா.,வில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் நாடே கடும் கோபத்தில் இருக்கிறது. இதற்கிடையே, பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பல தசாப்தங்களாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்து ஆதரவு அளிப்பதாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இது குறித்து ஐ.நா.,வில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=78peums0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து, ஐ.நா.வில் உள்ள இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜ்னா படேல் கூறியதாவது: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளித்து ஆதரித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலம் யாரையும் ஆச்சரியப்படுத்தவில்லை. உலகளாவிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு மோசமான நாடு என்பதை அம்பலப்படுத்தி உள்ளது.பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு, பயிற்சி மற்றும் நிதியுதவி அளித்ததை ஒப்புக்கொண்டதை உலகம் முழுவதும் மக்கள் கேட்டுள்ளனர். 2008ல் நடந்த பயங்கரமான 26/11 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாத தாக்குதலை அடுத்து, உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் மற்றும் அரசாங்கங்கள் அளித்த ஆதரவையும், ஒற்றுமையையும் பாராட்டுகிறோம். இது பயங்கரவாதத்தை பொறுத்துக் கொள்ள முடியாது என்பதற்கு சான்றாகும். பயங்கரவாதம் எல்லா வகையிலும் கண்டிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

VSMani
ஏப் 29, 2025 12:26

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மோசமான நாட்டை உலக நாடுகள் அணைத்தும் தள்ளி வைக்கவேண்டும் உலக நாடுகள் இந்த நாட்டுடன் எந்த ஒட்டும் உறவும் வைக்கக்கூடாது என்று இந்த அம்மையார் ஐ.நா.,வில் பேசவேண்டியதுதானே


MUTHU
ஏப் 29, 2025 12:11

க்கும். ஐநா பெரிய பிஸ்தா. அவனுக்கு குட்டு வைத்ததால் குருதி கொப்பளித்துவிடுமாக்கும். பாகிஸ்தான் நாட்டை தூக்கி அடிச்சு மிதிச்சு பந்தாடிடுவான். ஐயோ ஐயோ. அவனே வெட்டி. டம்மி பீசு.


R. SUKUMAR CHEZHIAN
ஏப் 29, 2025 11:57

இந்த மூன்றாம் தரமான பயங்கரவாத பாகிஸ்தானை ஆதரிக்கும் சீனா எவ்வளவு கீதரமான தரங்கெட் நாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தானை பிரிப்பது போல திபெத், கிழக்கு துருக்கிஸ்தான் மங்கோலியாவை சீனாவிடம் இருந்து பிரிந்து சீனாவை பலவீனமான வைத்திருக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை