உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நீண்ட தூர அணு ஆயுத ஏவுகணை தயாரிப்பு முயற்சியில் பாகிஸ்தான்

நீண்ட தூர அணு ஆயுத ஏவுகணை தயாரிப்பு முயற்சியில் பாகிஸ்தான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: நம் அண்டை நாடான பாகிஸ்தான் மீது, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் மத்திய அரசு சமீபத்தில் நடவடிக்கையை எடுத்தது. இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதல், நான்கு நாட்களில் முடிவுக்கு வந்தது.இதையடுத்து, தன் ஆயுத பலத்தை அதிகரிக்க பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் தன் அணு ஆயுதங்களை மேம்படுத்த முயற்சித்து வருகிறது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிப்பை விரைவுபடுத்தியுள்ளதாக அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.இந்த ஏவுகணை தயாரானால் பாகிஸ்தானை அணு ஆயுத எதிரியாக அமெரிக்கா கருதும். ஏனென்றால் இந்த ஏவுகணை 5,000 கி.மீ., தூரம் வரை சென்று தாக்கும் சக்தி கொண்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Yasararafath
ஜூன் 26, 2025 12:47

பாகிஸ்தான் எது முயற்சி செய்தாலும் அனைத்தும் தோல்வி அடைவதற்க்கு வாழ்த்துகள்


கண்ணன்,மேலூர்
ஜூன் 26, 2025 16:48

கண்டம் விட்டு கண்டம் பறக்கும்னு சொல்லிட்டு கராச்சியில விழுந்து தொலைக்கப் போகுது பாத்துடா பாக்கி பக்கிகளா! சீனா காரனை நம்பி வீணா போகாதீங்கடா...


Ramesh Sargam
ஜூன் 26, 2025 12:45

இந்தியாவிடம் இவ்வளவு அடி வாங்கியும் இந்த பாகிஸ்தான் நாடு திருந்த மாட்டேங்குதே...?


Anand
ஜூன் 26, 2025 10:25

சீன உதவியுடன்?? அப்படி தயாரித்து அதை அமெரிக்காவை நோக்கி பாயவிட்டால் சீன பெருங்கடலில் விழக்கூடும், எதற்கும் உலக நாடுகள் குறிப்பாக பாகிஸ்தானின் நட்பு நாடுகள் உஷாராக இருக்கவேண்டும்..


suresh Sridharan
ஜூன் 26, 2025 09:41

பாகிஸ்தான் மக்களுக்கு சோற்றுக்கு வழியும் படிப்பும் நல்ல பண்பும் சொல்லித் தர பார்க்கட்டும் அதற்குப்பின் இதெல்லாம் தொடங்கட்டும் தொடங்கியும் பிரயோஜனமில்லை


Iyer
ஜூன் 26, 2025 09:12

சீனாவின் ஆயுதங்களின் தரம் எப்படி என்று OPERATION SINDOOR காட்டிவிட்டது, சீனா பாகிஸ்தான் இரண்டையம் ஒரே நேரத்தில் துவம்சம் செய்யம் சக்தி இந்தியாவிடம் உள்ளது.


Iyer
ஜூன் 26, 2025 09:08

முதலில் தன் நட்டு மக்களுக்கு 2 வேளையாவது சாப்பாடு போட முயற்சி செய்யட்டும். வளைகுடா நாடுகளில் பாகிஸ்தானியர்கள் பிச்சை எடுக்க தான் வருகிறார்கள்.


Mohan
ஜூன் 26, 2025 09:04

குடிக்கவே தண்ணிய காணம் இதுல பன்னீர் கேக்குதோ ...


V RAMASWAMY
ஜூன் 26, 2025 09:03

அடி வாங்கியும் அடங்காதவர்களை ஒழிக்கவேண்டிய நிலைக்கு தள்ளுகிறார்கள்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 26, 2025 08:59

நீண்டதூரம் அதாவைத்து 200 அடி தூரம் செல்லும் அணு ஆயுத ஏவுகணை தயாரிப்பு முயற்சியில் பாக்கிஸ்தான் .இப்போதுதான் இறங்கி இருக்கிறது ... .பாக்கிஸ்தான் உருட்டுகளை ஆபரேஷன் சிந்தூரில் பார்த்தோமே .. இந்தியா பிமோஸ் ஏவுகணைகளை தயாரித்து அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது ..


ஈசன்
ஜூன் 26, 2025 07:57

.....தண்ணி இல்லையாம். இவர்கள் அணு ஆயுதம் தயாரிக்கப் போகிறார்களாம்.