உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா, கனடாவில் வசிக்கும் சீக்கியருக்கு பாகிஸ்தான் இலவச விசா

அமெரிக்கா, கனடாவில் வசிக்கும் சீக்கியருக்கு பாகிஸ்தான் இலவச விசா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: ''பாகிஸ்தானில் உள்ள மத தலங்களுக்கு செல்ல, அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சீக்கிய பக்தர்களுக்கு, 30 நிமிடங்களுக்குள், ஆன்லைனில் இலவச விசா வழங்கப்படும்,'' என, அந்நாட்டு உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.நம் அண்டை நாடான பாகிஸ்தானில், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில், பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு உள்துறை அமைச்சராக உள்ள மொஹ்சின் நக்வி, 44 சீக்கிய பக்தர்கள் அடங்கிய வெளிநாட்டு பிரதிநிதிகள் குழுவை, லாகூரில் சமீபத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார்.

பிரச்னை இருக்காது

இதன்பின், அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறியதாவது:பாகிஸ்தானில், சீக்கியர்கள் புனிதமாக கருதும் சில குருத்வாராக்கள் உள்ளன. இதற்கு உலகம் முழுதும் இருந்து ஏராளமான சீக்கியர்கள் வந்து செல்கின்றனர். கடந்த காலங்களில் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வதில் சீக்கிய பக்தர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். இனி அந்த பிரச்னை இருக்காது. சீக்கியர்களுக்கான விசா நடைமுறையை ஆன்லைன் வாயிலாக எளிதாக்கி உள்ளோம். அதன்படி, பாகிஸ்தானுக்கு வரும் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சீக்கிய பக்தர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்த 30 நிமிடங்களுக்குள் எவ்வித கட்டணமுமின்றி விசாக்களை பெற்றுக் கொள்ளலாம்.

முன்னுரிமை

இந்த நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். சீக்கிய சமூகத்திற்கு அதிக வசதிகளை வழங்குவதே அரசின் முன்னுரிமை. முஸ்லிம்களுக்கு சவுதி அரேபியா புனிதமானது போல, சீக்கியர்களுக்கு பாக்., புனிதமானது. பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் பல்வேறு பாரம்பரிய தலங்கள் திறக்கப்படும். இதற்கு எந்த அனுமதியும் தேவையில்லை. பாகிஸ்தானுக்கு வருகை தரும் சீக்கிய பக்தர்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு, 1 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Nakkeeran Nakkeeran
நவ 04, 2024 13:53

கெடுவான் கேடு நினைப்பான்.... நினைக்கிறான் கேடை அனுபவிப்பான்...


Ramaswamy
நவ 03, 2024 13:11

This is a dirty trick to attract Kalistani separatists to go against India and to make Contact with ISI. Pakistan will never change. Now they are assisting Canada to go against India. If Canada listen them Canada will be converted as another Pakistan. If Canadian government get changed in the coming election, India can be changed as a friendly country again.


Ramesh Sargam
நவ 03, 2024 13:01

மத ஸ்தலங்களுக்கு செல்லவா, அல்லது பயங்கரவாதம், தீவிரவாதம் இவற்றிக்கு பயிற்சி கொடுக்கவா...??


தமிழ்வேள்
நவ 03, 2024 10:30

1947 பிரிவினையின் போது சீக்கிய சகோதரிகள் பாக்.மூர்க்கன்களால் சீரழிந்து சித்திரவதை மரணம் அடைந்ததை மறக்காமல் இருந்தால்.. மூர்க்க நாட்டை சுடுகாடு ஆக்கி கழுதை ஏர் பூட்டி உழுது பேய்க்கடுகு விதைக்க வேண்டும்...


வீரபாண்டி,அலங்காநல்லூர்
நவ 03, 2024 12:30

ஏன்டா நீங்களே அரபு நாடுகளுக்கு உங்க நாட்டு பிச்சைக்காரர்களையும் சீனாவுக்கு கழுதையும் ஏற்றுமதி பண்ணி கேவலமாக வருமானம் பார்ப்பது மட்டுமில்லாமல் உலக வங்கியிடம் வேற பிச்சை எடுக்கிறீங்களே உங்களை நம்பி உங்க நாட்டு விசாவுல எவன் ஓசியில வருவான் அப்படியும் எவனாவது வந்தானுக என்றால் அவனுக இடுப்புலயும் வெடிகுண்டை கட்டி விட்டு தீவிரவாதியா மாத்திருவிங்களே....


தமிழ்வேள்
நவ 03, 2024 12:39

அலங்காநல்லூராரே.. நான் ஹிந்து பாரதீயன்.. என்னைப்பற்றிய தங்கள் புரிதல் தவறு


ramesh
நவ 03, 2024 10:27

நல்ல சீக்கியர்களையும் தீவிரவாதிகளாக்கும் முயற்சி


Ramaswamy
நவ 03, 2024 08:49

This effort is nothing but to promote kalistanies/terrorism through


ராமகிருஷ்ணன்
நவ 03, 2024 05:40

சீக்கிய தீவிரவாதிகளை தயார் செய்து பஞ்சாப் வழியாக இந்தியாவுக்கு தொல்லை கொடுக்குற திட்டம் ரெடி


Rpalnivelu
நவ 03, 2024 04:39

பலூச்சிஸ்தான் வீரர்களுக்கு தோவல் மறைமுகமாக எல்லா உதவிகளையும் செய்யணும்


அப்பாவி
நவ 03, 2024 03:46

இந்தியா வழியா வந்தா இவிங்க உருவிடுவாங்க.


அப்பாவி
நவ 03, 2024 03:45

500 டாலர் கட்டணமா உருவிடுவாங்க.