உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் 'ஆப்பரேஷன் சிந்துார்' மூலம் தகர்க்கப்பட்ட, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரில் உள்ள 15 பயங்கரவாத முகாம்கள் மற்றும் ஏவுதளங்கள், 90 நாட்களுக்குள் மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆப்பரேஷன் சிந்துார் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மட்டும், ஒன்பது பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்த நம் ராணுவம், 100 பயங்கரவாதிகளையும் கொன்று குவித்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=10ty6akf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நடவடிக்கை முடிந்து, 90 நாட்களே ஆன நிலையில், பாக்., மீண்டும் பயங்கரவாத செயல்களுக்கு தயாராகி வருவதாக நம் உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உதவியுடன் பயங்கரவாத முகாம்கள், ஏவுதளங்கள் மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர புதிய பயங்கரவாத திட்டங்களை வகுக்க, ஜெய்ஷ்- - இ- - முகமது, லஷ்கர் - -இ - -தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் உயர் தளபதிகளுடன், பல ஆலோசனை கூட்டங்களை ஐ.எஸ்.ஐ., உயர் அதிகாரிகள் நடத்தியுள்ளனர். பயங்கரவாத முகாம்கள் மீண்டும் தயாராகியுள்ள நிலையில், நான்கு இடங்களில் ஏவுதளங்கள், ஒரு ட்ரோன் மையமும் அமைக்கப்பட்டுள்ளன. முன்பு ஒரே முகாமில் இந்த எண்ணிக்கை 5 மடங்கு அதிகமாக இருந்தது. இதேபோன்று, தற்போது முகாம்களில் அதிகமான பெண்களையும் குழந்தைகளையும் கேடயங்களாகப் பயன்படுத்த சேர்த்து வருகின்றனர். இதற்காக, ஐ.எஸ்.ஐ., 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

சிவம்
ஆக 05, 2025 20:44

இந்தியா இனி தீவிரவாதிகள் தாக்குதலை பற்றி கவலை கொள்ளாது. பிரதமர் முன்பே சொல்லிவிட்டார். பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதல்கள் இனிமேல் அவர்கள் நம் மீது தொடுக்கும் போராக கருதப்பட்டு பதில் தாக்குதல் உடனே கொடுக்கப்படும் என்று.


M Ramachandran
ஆக 05, 2025 11:28

முஹம்மது அலி ஜின்னாகூட இந்தளவிற்கு பாகிஸ்தான் முன்னேரும் என்று. பாகிஸ்தான் இப்பொராஜ வீட்டு கன்னுகுட்டி ஒரு பக்கம் அமெரிக்கா மறுபுறம் பொறாமையில் வெந்து சாகும் சீனன்.பணம் என்ற நல்ல ஊட்ட சத்து கொடுத்து தீவிர வாதத்தை வளர்க்க உதவுகிறார்கள். ணாமூர் திருட்டு கும்பலிய்ய விட பாகிஸ்தான் ராணுவ தலமை சுரண்டி வளம் காணுகிறான்கள்.


Apposthalan samlin
ஆக 05, 2025 10:48

sindoor தாக்குதல் அரசியலுக்கு ஆக உருவாக்க பட்டது இதனால் என்ன பிரயோஜனம் நாம் இழந்தது தான் ஏராளம் அறிவு உள்ளவர்கள் சிந்திப்பர் .


theruvasagan
ஆக 05, 2025 10:05

15 தீவிரவாதிகள் முகாம்களை தரையோடு தரையாக தகர்த்து எறிந்தது பாரதம் என்கிற செய்தி சீக்கிரம வரும் என்று எதிர்பார்ப்போம்.


Sivasankaran Kannan
ஆக 05, 2025 09:54

உருப்படாத காட்டு மிராண்டி கூட்டம். கேடு கேட்ட இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ராகுல் மற்றும் சிதம்பரம் மாதிரியான துரோகிகள்..


Kalyanaraman
ஆக 05, 2025 08:38

குழந்தையும் கிள்ளிவிட்டு தொட்டில் மாட்டுவது போல் அமெரிக்கா பயங்கரவாதிகளை உருவாக்க - பாதுகாக்க பாகிஸ்தானுக்கும் உதவி செய்கிறது அதே நேரத்தில் இந்தியாவிடம் தனது போர் கருவிகளை வாங்க பொய்யான நட்போடு இருக்கிறது. இந்த இரட்டை வேடம் பாகிஸ்தான் என்ற நாடு நான்காக / ஐந்தாக பிரியும் வரை இருக்கும்.


N.Purushothaman
ஆக 05, 2025 08:36

பாகிஸ்தானை துண்டாடுவதை தவிர வேறு தீர்வு இதற்க்கு இல்லை ...முதலில் பலுசிஸ்தானை பிரித்தாலே 45 சதவிகித நிலப்பரப்பு பாகிஸ்தானின் கையை விட்டு சென்று விடும் ...அதே போல் பாரத பாகிஸ்தான் எல்லையில் ஒரு சிறிய பரப்பளவு கொண்ட பகுதியை Buffer State உருவாக்க வேண்டும் ...


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 05, 2025 08:15

காசா பகுதியை முழுவதுமாக இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டமிடுதல் போல பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரத்தையும் இந்திய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஒரே காஷ்மீர் ஆக்கவேண்டும் ,அது ஒன்றுதான் நிரந்தர தீர்வு .


Palanisamy Sekar
ஆக 05, 2025 06:33

வேறு ஒண்ணுமில்லை. இந்திய ராணுவத்திற்கு பயிற்சி கொடுக்கும் வகையில் மீண்டும் பயங்கரவாத கட்டமைப்புகளை நிறுவி வருகின்றார்கள். மீண்டும் இந்தியா தாக்குதலை நடத்த பயிற்சி கொடுக்கின்றார்கள் போலும். கேன்சர் நோய்களை முழுவதுமாக முற்றிலுமாக நிரந்தரமாக துடைத்தொழித்துவிடலாம். அதுவே இவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற சரியான தண்டனையாக இருக்கும்.


ராமகிருஷ்ணன்
ஆக 05, 2025 06:33

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களின் மீது அணுகுண்டு போட்டா தான் அடங்குவான்கள், சோத்துக்கு பிச்சை எடுத்தாலும் இதற்கு ஒன்னும் கொறச்சல் இல்லை.


புதிய வீடியோ